மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலவர் நன்றி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார்.


அந்த கடிதத்தில், அவர் எழுதியுள்ள கடிதத்தில், மதுரை மாவட்டம் தோப்பூரில் 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்து, நிதி ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற உயர் மருத்துவ மையம் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நீண்ட கால கனவு திட்டம் என்று அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் மூலம், இந்தத் திட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டுசென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இந்தத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஆதரவையும் தனது அரசு வழங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், இதற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.