ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பலமான அணியாக இருந்தது மும்பை இந்தியன்ஸ். இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி கடந்த சில ஆண்டுகளாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 2020ம் இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது. அதற்கு முன்பு, ரோஹித் சர்மா தலைமையில் 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. 2020க்கு பிறகு தொடர் தோல்விகளை மட்டுமே மும்பை அணி சந்தித்து வந்தது. இதனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இருப்பினும் இந்த ஆண்டும் கடைசி இடத்தை பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதுமட்டுமின்றி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்காக அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் மிகுந்த கோபத்திலும் உள்ளனர்.
மேலும் படிக்க | தோனியை என்னால் மன்னிக்கவே முடியாது! கொதித்தெழுந்த யுவராஜ் சிங் தந்தை!
மறுபுறம் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வெல்லாத ஒரு அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. ஐபிஎல்லில் மூன்று முறை இறுதி போட்டிகளில் விளையாடியது, ஆனால் அனைத்தையும் இழந்தது. 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ், 2011ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு எதிராக இறுதி போட்டியில் தோல்வியடைந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் தோல்வியை சந்தித்தாலும், கடைசி சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியது ஆர்சிபி அணி. கடைசி லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பிளேஆப்களுக்கும் சென்றது. ஒரு அணியாக சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், சில ஆர்சிபி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டதால், ஏலத்தில் அவர்களின் மதிப்பு கூடலாம். அந்த வகையில் ஐபிஎல் 2025 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சில ஆர்சிபி வீரர்களை குறிவைத்துள்ளது.
யாஷ் தயாள்
இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆர்சிபி அணியில் இருப்பதால், யாஷ் தயாளைத் தக்கவைத்துக்கொள்ள அவர்களால் முடியாமல் போகலாம். எனவே அவரை ஏலத்தில் விட்டு மீண்டும் எடுக்க முயற்சி செய்யும். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் பவர் பிளேயில் அதிகம் உதவியாக இருப்பார். மேலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசும் இவரை மும்பை அணி ஏலத்தில் குறி வைக்கலாம். அவர்களுக்கும் பும்ராவை தாண்டி ஒரு சிறப்பான இந்திய பந்துவீச்சாளர் தேவைப்படுகிறார்.
வில் ஜாக்ஸ்
ஐபிஎல் 2025 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் டார்கெட் செய்யும் முக்கிய வீரர்களில் ஒருவர் வில் ஜாக்ஸ். ஐபிஎல் 2024ல் தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார் வில் ஜாக்ஸ். எனவே ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் வந்தால், அவரை மும்பை அணி நிச்சயம் எடுக்க முயற்சி செய்யும். மும்பை அணியில் உள்ள டெவால்ட் ப்ரீவிஸ் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை, எனவே ஜாக்ஸை ஒப்பந்தம் செய்ய அதிக முயற்சி செய்யும்.
கிளென் மேக்ஸ்வெல்
ஐபிஎல் 2024ல் கிளென் மேக்ஸ்வெல் மோசமான பார்மில் இருந்து வந்தார். ஆர்சிபி அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் அவரை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது, தனி ஒருவராக போட்டியை முடிக்கும் சக்தி அவரிடம் உள்ளது. சின்னசாமியைப் போலவே வான்கடேயும் அவருக்கு பிடித்த மைதானம். மும்பை அணியில் கிளென் மேக்ஸ்வெல் இருந்தால் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். எனவே இவரை ஏலத்தில் மும்பை அணி டார்கெட் செய்யும்.
மேலும் படிக்க | விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ