Aircel Maxis முறைகேடு வழக்கு வரும் ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2006-ஆம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த Maxis நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3, 500 கோடி முதலீடு செய்தது.



இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்துவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.


இது குறித்து  இருவர் மீதும் CBI மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 


இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை CBI காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்தது. மேலும், இது தொடர்பாக CBI தரப்பில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக புதிய ஆதாரங்கள் உள்ளதாகவும், இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவுடன் வெளிநாடுகளில் உள்ள இவர்களது வங்கி கணக்குகள் உடனடியாக மூடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


இதனையடுத்து Aircel Maxis முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர் 18-ஆம்(இன்று) தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி CBI தலைமை நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.


இந்நிலையில் இன்று இவ்வழக்கு வழக்கு வரும் ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், இவ்வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜனவரி 11-ஆம் நாள் வரை தடையை நீட்டித்தும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!