நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. புதன்கிழமையும் (ஏப்ரல் 21) இந்த போக்கு தொடர்ந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மட்டும் தமிழகத்தில் 11,681 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று (Coronavirus) பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக உயர்ந்துள்ளது. இன்று 53 பேர் இறந்த நிலையில், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 


முன்னதாக, ஞாயிறன்று முதன் முறையாக 10,000-க்கு மேலான ஒற்றை நாள் தொற்றை தமிழகம் பதிவு செய்தது. ஞாயிறன்று மட்டும் தமிழகத்தில் 10,723 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். திங்களன்று 10,941 ஆக அதிகரித்த ஒற்றை நாள் தொற்று செவ்வாயன்று 10,986 ஆக உயர்ந்தது. 


தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று மீண்டவர்களின் எண்ணிக்கை இன்று 9,27,440 ஆக உயர்ந்துள்ளது. இன்று 7,071 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர். 


ALSO READ: Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்


சென்னையில் மட்டும் 3,750 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,94,073 ஆக அதிகரித்தது. தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையிலும் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 4,450 பேர் வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். 


இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் (Corona Testing) எண்ணிக்கை 1,12,661 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 2,15,13,210 ஆக அதிகரித்தது. சென்னையைத் தவிர, 24 மாவட்டங்களில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் உள்ளது. 


இன்று செங்கல்பேட்டில் 947 பேருக்கும், கோயம்புத்தூரில் 715, கடலூரில் 147, திண்டுக்கல்லில் 185, ஈரோட்டில் 284, காஞ்சீபுரத்தில் 263, கன்னியாகுமரியில் 171, கிருஷ்ணகிரியில் 259, மதுரையில் 462, நாமக்கல்லில் 200, ராணிப்பேட்டையில் 203, சேலத்தில் 401, தென்காசியில் 115, தஞ்சாவூரில் 179, தேனியில் 148, திருவள்ளூரில் 529, திருவண்ணாமலையில் 135, தூத்துக்குடியில் 275, திருநெல்வேலியில் 426, திருப்பூரில் 238, திருச்சியில் 357, வேலூரில் 286, விழுப்புரத்தில் 109 மற்றும் விருதுநகரில் 101 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகியுள்ளது என்று சுகாதாரத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. 


இன்று தொற்று உறுதியான சுமார் 70 பேர் மற்ற இடங்களிலிருந்து தமிழகத்துக்கு (Tamil Nadu) திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: பீதியைக் கிளப்பும் சென்னையின் 'COVID Positivity Rate', நிலைமை மோசமாகலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 


செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR