சென்னை: இந்தியா முழுதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திலும்
நாளுக்கு நாள் தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.
பீதியைக் கிளப்பும் சென்னையின் பாசிடிவிட்டி ரேட்
சென்னையில், கோவிட் -19 நேர்மறை விகிதம் (Positivity Rate) 18 சதவீதமாக உள்ளது. இது மாநிலத்தின் மொத்த விகிதமான 9.7 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். சென்னையில் ஏப்ரல் 18 ஆம் தேதி நிலவரப்படி, 25,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் கொரோனா (Coronavirus) பரவல் பற்றி ஊடகங்களுடன் பேசிய சென்னையின் கோவிட் தரவு ஆய்வாளர், நகரத்தில் தற்போது வைரசின் இரட்டிப்பு விகிதம் சுமார் எட்டு நாட்களாக உள்ளது என்று கூறினார். தற்போதைய போக்கு தொடர்ந்தால், ஒரு வாரத்தில் சென்னையில் சுமார் 50,000 பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்று அவர் கூறினார். இதற்கிடையில், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் இரட்டிப்பு விகிதம் ஒன்பது நாட்கள் என்றும், தற்போதைய போக்கு தொடர்ந்தால், ஆறு நாட்களில் மாநிலத்தில் தொற்றின் என்ணிக்கை ஒரு லட்சம் என்ற இலக்கை எட்டும் என்றும் அவர் கூறினார்.
ALSO READ: Tamil Nadu Corona Update: தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 பேர் பலி, பாதிப்பு சுமார் 11000
வரும் வாரங்களில் நிலைமை மோசமாகலாம்
தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவிகித மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் (Quarantine) கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். எனினும் வரும் வாரங்களில் மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களின் நோயாளிகளின் வருகை அதிகமாகும் நிலை ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்போது, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனில் 1,500 க்கும் மேற்பட்டோர் கோவிட் பராமரிப்பு மையங்களில் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் சென்ற ஆண்டு இருந்த செயல்முறையை இன்னும் மேம்படுத்தவில்லை என்றும், மார்ச் 2020 இல் பயன்படுத்தப்பட்ட அதே நெறிமுறையைப் பயன்படுத்தி வருவதாகவும் ஒரு தொற்று நோய் நிபுணர் குற்றம் சாட்டினார். தொற்று தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் இன்னும் விரைவாக எடுக்கப்பட வேண்டும் என்றும், இம்முறை ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவருடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் தொற்று பரவி இருப்பது கண்டறியப் படுகிறது என்றும், இது மிகவும் தீவிரமான ஒரு நிலைமை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி
கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இப்போது ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி தொடர்பான நிலையை கண்காணிக்க வேண்டிய தேவை இருப்பதாக தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் உதவி இயக்குனர் டாக்டர் பி கணேஷ் குமார் தெரிவித்தார்.
கோவிட் (COVID-19) பராமரிப்பு மையங்களில் குடிமை அமைப்பில் 12,600 படுக்கைகள் இருப்பதாகவும், அந்த எண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாசிடிவிட்டி ரேட் என்றால் என்ன?
கொரோனா வைரஸ் தொற்றுக்காக சோதனை செய்யப்படும் மொத்த நபர்களுடன் ஒப்பிடும்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் சதவீதம் பாசிடிவிட்டி ரேட் எனப்படும்.
ஒரு பகுதியில் பாசிவிட்டி ரேட் அதிகமாக இருந்தால், அந்த பகுதியில் அதிகமானோருக்கு தொற்று உள்ளது என்றும் அங்கு பரவல் அதிகமாக உள்ளது என்றும் பொருளாகும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு இடத்தின் பாசிடிவிட்டி ரேட் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு 5%-ஐ விட குறைவாக இருந்தால் மட்டுமே, அரசாங்கம் அப்பகுதிக்கான கட்டுப்பாடுகளை குறைக்க முடியும்.
ALSO READ: Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான
செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR