புதிய உச்சம், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதிக., தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.
ALSO READ | உங்கள் பிராந்திய மக்களுடன் தொடர்பு கொண்டு உதவுங்கள்: அமைச்சர்களிடம் பிரதமர் மோடி
தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 16,007 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10, லட்சத்து 37 ஆயிரத்து 582 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 16 ஆயிரத்து 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் இன்று மேலும் 5,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் கொரோனா தடுப்பூசியின் (Corona Vaccine) மூன்றாம் கட்டம் மே 1 முதல் தொடங்குகிறது. இதற்கான பதிவு செயல்முறை புதன்கிழமை (ஏப்ரல் 28) நான்கு மணிக்கு தொடங்கி உள்ளது. மூன்றாம் கட்டத்தில், 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR