டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகமாக மது விற்பனை! 16 ஊழியர்கள் சஸ்பெண்ட்! புகார் செய்வது எப்படி?
இனி டிஜிட்டல் முறையிலும், ஆன்லைன் முறையிலும் மது விற்பனை நடைபெறும் என்பதால் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் டிஜிட்டல் முறையிலான மதுபான விற்பனை துவங்கியது. மதுபான பாட்டில்களிலுள்ள QR CODE-ஐ ஸ்கேனர் மிஷின் மூலம் ஸ்கேன் செய்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பில்லுடன் மதுபான பாட்டிகளை மதுபான கடை ஊழியர்கள் மதுபிரியர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஸ்கேன் செய்து பில் போடுவதற்கு கூடுதல் நேரம் பிடிப்பதால் ஏராளமான மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு டாஸ்மாக் கடைகளை நடத்துவதால் பல்வேறு விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில், விற்பனையும் மாதம் மாதம் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் தளபதி விஜய்? தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!
மேலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு குவாட்டர் மது பாட்டில் வாங்கினால் பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பதாக தொடர்ந்து வீடியோக்களும் வெளியாகியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மது குடிப்பவர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் கூடுதல் பணம் வைத்து விற்பது தொடர்பான வாக்குவாதங்கள் கூட எழுந்தது சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகம் வசூல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விவகாரத்தில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையில் இறங்கியது.
அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு பில் கொடுப்பது ஆன்லைன் மூலம் பேமெண்ட் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ய அரசு முடிவு செய்தது. இதற்காக க்யூ ஆர் கோடு (QR CODE ) பொருத்திய மது பாட்டில்கள் தயாரிப்பதையும் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால், மதுபாட்டினில் விலையை உறுதிப்படுத்திக் கொண்டு அதே விலையில் பில் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுமார் 220 டாஸ்மாக் கடைகளில், டிஜிட்டல் முறையில் QR CODE ஸ்கேன் செய்து மதுப்பானத்திற்கான விலை அடங்கிய ரசீது வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மது பாட்டிலுக்கு நிர்ணிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூடுதல் விலைக்கு மது விற்பனை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஊத்துக்காடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் எட்டு நபர்களும் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் மற்றொரு டாஸ்மாக் கடையில் 8 ஊழியரும் என 16 டாஸ்மாக் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகமானது உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் QR Code மூலம் மதுபானங்கள் விற்பனை துவங்கப்படிருந்தும் கூட இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையில் நிர்ணிக்கப்பட்ட விலையில் இருந்து கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்து விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் எதிரொலியாக இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என 16 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் 16டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சக டாஸ்மாக் பணியாளர்களிடையே பெரும் கலக்கத்தையும், மது பிரியர்களிடையே பெருத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ