தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் தளபதி விஜய்? தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Nov 18, 2024, 01:00 PM IST
    தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி?
    2026ல் வெற்றி பெற புதிய கூட்டணி.
    தமிழக வெற்றிக் கழகம் மறுப்பு.
தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் தளபதி விஜய்? தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை! title=

கடந்த மாதம் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்ட மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளை விஜய் வெளியிட்டார். மாநாடு மேடையில் திமுக மற்றும் பாஜகவை எதிர்த்து பேசியிருந்தார் விஜய். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்தது.  மாநாட்டில் விஜய் அதிமுகவை எதிர்த்து பேசவில்லை, இதனால் ஒரு வேலை 2026 தேர்தலில் அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி வைக்குமா என்ற பேச்சு எழுந்தது. மேலும் கடந்த சில நாட்களாக விஜய் 2026 தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்றும் பரவலாக பேச விட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரி சிக்கியது எப்படி? தகவல் கொடுத்த வீட்டு பணியாளர்கள்

அதில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. 

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆடசி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. 

வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள். எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பேட்டியில் விஜய் படத்தை காட்டிய இளைஞர் - வானதி ஸ்ரீனிவான் சொன்ன பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News