சென்னை வாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்!
மெட்ரோ பணி காரணமாக நாளை முதல் ஒரு வார காலத்திற்க்கு மேடவாக்கத்தில் போக்குவத்து மாற்றம் செய்துள்ளதாக தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து பாதிப்பு தினந்தோறும் அதிகம் காணைப்படுகிறது. பொதுவாக ஐடி நிறுவணங்கள் அதிகம் செயல்படும் ஓஎம்ஆர் சாலையில் குறிப்பாக எஸ்.ஆர்.பி.டூல்ஸ், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதியில் மெட்ரோ பணிகள் நடந்துவருவதால் தினமும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சோழிங்கநல்லூரில் இருந்து செம்மொழி சாலை வழியாக தாம்பரம் செல்லும் வாகன ஓட்டிகள் மேடவாக்கத்தில் இடது புறம் திரும்பாமல் வலது புறம் வேளச்சேரி பிரதான சாலையில் திரும்பி ஜெயச்சந்திரன் அருகே யூ டர்ன் போட்டு மேம்பாலம் மீது ஏறி தாம்பரம் செல்லலாம் என்று தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்
ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதியிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மாம்பாக்கம் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி ஜெயசந்திரன் சந்திப்பில் (U Turn) யூ டர்ன் செய்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். மாம்பாக்கம் சாலை மற்றும் வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேடவாக்கம் சந்திப்பு வழியாக நேரடியாக தாம்பரம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வேளச்சேரி பிரதான சாலை மற்றும் செம்மொழி சாலைகளில் CMRL மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு 02.07.2023. அன்று முதல் சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தனர்.
மேலும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் வரும் ஜூலை15 ம் தேதி திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட உள்ளது எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். கோவை நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ல், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.இந்நிலையில், இத்திட்டத்தில் மெட்ரோ ரயில் செயல்படுத்துவது குறித்தும் முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ,சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப் திட்ட எண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் , திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டுள்ளது என தெரிவித்தார். கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் வரும் ஜூலை15 ம் தேதி திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார். கோவை அவினாசி சாலை, சக்தி சாலை என இரு சாலைகளில் முதல்கட்டமாக திட்டம் செயல்படுத்த படுகின்றது எனவும்,
மொத்தம் 39 கி.மீ தூரம் , 32 நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.
அவினாசி சாலையில் 17 ரயில் நிலையங்கள்,சக்தி சாலையில் 14 ரயில் நிலைங்கள் அமைய இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், இந்த பாதையில் 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்க திட்ட மிடப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். திட்ட அறிக்கை தமிழக அரசிடம் கொடுத்த பின்னர், ஒன்றிய அரசின் ஒப்புதல், பன்னாட்டு நிறுவன நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்த பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார். கோவை அவினாசி சாலையில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், பாலத்தின் இடது புறத்தில் மெட்ரோ ரயில் பாதைக்காற பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், முதல்கட்டமாக இரு பாதைகளும் உயர்மட்ட பாலமாக செயல் படுத்தபடுகின்றது எனவும் தெரிவித்தார். நீலாம்பூரில் இருந்து உக்கடம் வரை அவினாசி சாலையிலும், காந்திபுரத்தில் இருந்து வளையம்பாளையம் வரை சத்தியமங்கலம் சாலையிலும் அமைக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
மெட்ரோ பணிகள் துவங்கியதில் இருந்து 3.5 ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், மெட்ரோ ரயிலில் மூன்று பெட்டிகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு பெட்டியிலும் 250 பேர் பயணிக்க முடியும் எனவும் தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டம் 150 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனவும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு இருப்பதாகவும் , திட்டம் முழுவதும் உயர்மட்ட பாலமாகவே திட்டமிடப்பட்டுள்ளது எனவும், சுரங்க பாதைகள் எதுவும் திட்டமிடப்பட வில்லை எனவும் தெரிவித்தார். ஒரு சில இடங்களில் நில எடுப்பு இருக்கும் எனவும், இந்த திட்டத்திற்காக சுமார் 75 ஏக்கர் வரை அரசு மற்றும் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கின்றது எனவும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்தார்.இதனைதொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் அதிகாரிகள் சித்திக், ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் மெட்ரோ ரயில் திட்டம் அமைய இருக்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க | சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் சென்னையில் நடந்த கொலை: பின்னணி இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ