சென்னை: கொரோனா தொற்றால் நமது வாழ்க்கை பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பினரும் ஏதாவது ஒரு வழியில் தாக்கத்தை அனுபவித்து வருகின்றனர். மிக அதிக பாதிப்பை எதிர்கொண்டவர்களில் மாணவர்களும் அடங்குவர். குறிப்பாக, பொதுத் தேர்வுகளை எதிர்கொண்டிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னால் தெர்வுகள் நடக்குமா நடக்காதா என்பது பற்றிய ஒரு பெரிய கேள்வி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அரசு தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) ஆலோசனை நடத்தினர். மேலும், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடனும் பேசி அவர் கருத்துகளை கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்த வரிசையில், இன்றும் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்த முக்கிய சந்திப்புகளை மெற்கொள்ளவிருக்கிறார். 


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று, சட்டப்பேரவையில் உள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்பார் என தெரிகிறது. இந்த சந்திப்பில் கலந்துகொள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் அதிமுக சார்பில் சந்திப்பில் கலந்துகொள்வார் என அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்எஸ் பாலாஜி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியவுடன், அன்பில் மகேஷ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் (MK Stalin) இது குறித்து ஆலோசனை செய்வார். அதற்குப் பிறகு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும், இன்று அல்லது நாளைக்குள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த ஒரு முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுள்ளது. 


ALSO READ: ஆல்பாஸ் கிடையாது; மாணவர்களின் எதிர்காலமே எங்களுக்கு முக்கியம்: அமைச்சர் அன்பில் மகேஷ்


பொதுத் தேர்வுகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:


- கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்த பிறகு முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படலாம்.


- மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் வழங்குவதற்கான ஒரு சீரான செயல்முறை அறிமிகப்படுத்தப்படலாம்.


- தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்கள் சில நாட்களுக்குப் பிறகு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.


- மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வுகளை நடத்தலாம்.


பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் (Board Exams) வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை என்றும், அதற்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமே தவிர ஒத்திவைக்கப் படாது என ஏற்கனவே அன்பில் மகேஷ் கூறியிருந்தார். எனினும், தொற்று பரவல் தீவிரமான நிலையில், மாணவர்களின் ஆரோக்கியத்தையும் உடல் நலனையும் ஆபத்தில் தள்ள முடியாது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. 


இதற்கிடையில் தேர்வுகளை நடத்த பெரும்பாலான பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த ஒரு நல்ல முடிவை அரசு எடுக்கும் என மாணவர்கள் காத்திருக்கிறார்கள். 


ALSO READ: பிளஸ் டூ தேர்வு: 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR