ஆல்பாஸ் கிடையாது; மாணவர்களின் எதிர்காலமே எங்களுக்கு முக்கியம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவிட்-19 தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் பன்னிரெண்டாம் தேர்வு நடத்துவதற்கான தேதி இறுதி செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

Written by - Shiva Murugesan | Last Updated : May 15, 2021, 05:28 PM IST
  • கோவிட்-19 தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் +2 தேர்வு நடத்துவதற்கான தேதி இறுதி செய்யப்படும்.
  • பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
  • அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிட முடியும். அது முக்கியமல்ல.
ஆல்பாஸ் கிடையாது; மாணவர்களின் எதிர்காலமே எங்களுக்கு முக்கியம்: அமைச்சர் அன்பில் மகேஷ் title=

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதியின் முதல் தவணை வழங்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "கோவிட்-19 தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் பன்னிரெண்டாம் தேர்வு நடத்துவதற்கான தேதி இறுதி செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புக்கள் நடத்தப்பட்டன. ஓரளவுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, மீண்டும் 9 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல கல்லூரிகளும் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா (COVID-19) வைரசின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 

ALSO READ |  தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரூ.2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம் துவங்கியது

இன்னும் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படாததால், தேர்வு எப்பொழுது நடத்தப்படும் மற்றும் பள்ளிகள் மீண்டும் எப்பொழுது திறக்கப்படும் போன்ற கேள்விகள் மாணவர்களின் பொற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்நிலையில், இன்று திருவெறும்பூர் தொகுதியில் வரகனேரி ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம் பிளஸ் 2 தேர்வு குறித்து கேள்வி எழுப்பட்டது. 

அதுக்குறித்து பேசிய அவர், "பிளஸ் 2 தேர்வு (12th Exam) நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்துக் கேட்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 தேர்வைக் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றுதான் அனைவருமே வலியுறுத்தினர். அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிட முடியும். அதற்காக மாணவர்கள் அனைவரும் பாராட்டுவார்கள். ஆனால், அது முக்கியமல்ல. ஏனெனில், மாணவர்களுடைய எதிர்காலம் தான் எங்களுக்கு முக்கியம். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. எப்பொழுது நடைபெறும் என்பது குறித்து ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு அறிவிக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

ALSO READ |  School Holiday in Tamil Nadu: மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News