விழுப்புரத்தை விட்டு பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பேரவையில் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் 33-ஆவது மாவட்டமாக கள்ளகுறிச்சியை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


நிர்வாக வசதிக்காகவும், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாலும், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக்கப்பட்டுள்ளது. 


விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு எல்லையிலுள்ள சின்ன சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க 100 கிலோ மீட்டருக்கும் கூடுதலான தொலைவு பயணம் செய்ய வேண்டிய சுமை குறையும்.


திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகியவையும் 5000 சதுர கி.மீக்கு அதிக பரப்பளவு கொண்ட பெரிய மாவட்டங்கள் ஆகும். ஒரு மாவட்டம் இந்த அளவுக்கு பரந்து விரிந்து கிடப்பது அதன் வளர்ச்சிக்கு வழி வகுக்காது. ‘சிறியது தான் அழகு (Small is Beautiful)’ என்ற தத்துவத்தின்படி பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் தொடக்கத்தில் 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அவை மொத்தம் 31 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் புதிய மாவட்டங்களின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டுள்ளதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
 
விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரியாக IAS அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.