பல் பிடுங்கப்பட்ட சம்பவம்: சிபிசிஐடியால் விசாரிக்க முடியாது - பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் சொல்வது என்ன?
சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது என்றும் சிபிஐ விசாரணை தேவை என்றும் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் இரு சமுதாய மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக சமாதானம் பேச சென்ற நேதாஜி சுபாஷ் சேனை தலைவரும் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞருமான மகாராஜன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாதி கலவரத்தை தூண்டி விடுவதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசாரின் மறைமுக முயற்சி
தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் அவர் திருநெல்வேலி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,"திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற லாக்கப் டெத் தொடர்பாக சிவந்திபட்டி வழக்கு, அம்பாசமுத்திரம் பல் உடைப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் இருந்து பின்வாங்க வைக்க காவல்துறை உயர் அதிகாரிகள் மறைமுகமாக என்னை அறிவுறுத்துகின்றனர்.
மேலும் படிக்க | மலக்குழியில் மரணம்! மலக்குழிக்குள் கடவுள்களை இறக்கிய கற்பனையின் எதிரும் புதிரும்...
சம்மன் அனுப்ப வேண்டும்
கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது பல்வேறு உயர் அதிகாரிகள் வழக்குகளை கைவிட அறிவுறுத்துகின்றனர். ஏஎஸ்பி உள்ளிட்ட குற்றம் சாட்டபட்டவர்களை கைது செய்துவிட்டுதான் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். சாத்தான்குளம் வழக்கில் அவ்வாறு தான் நடந்தது. பல்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்பி அவரை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கவேண்டும். அவர்களால் பல்வீர் சிங்கை சம்மன் அனுப்பி விசாரிக்க முடியாது.
சிபிஐ விசாரணை தேவை
சிபிசிஐடி விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு. சிபிசிஐடி போலீஸ் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. சிபிஐ விசாரணை தேவை. அவர்கள் நியாயமாக விசாரிப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.
பல் உடைப்பு சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் விசாரணை அழைத்து செல்லப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் எழுந்த புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு புகார் வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | பாஜகவில் பிடிஆர்? 'நாங்கள் அழைக்க மாட்டோம், ஆனால்...' - அண்ணமாலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ