புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டிய நபர்கள்: துணிச்சலாக புகாரளித்த சிங்கப்பெண்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன
ஆம்பூரில் புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்து வந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது 10வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலின் போது அவருக்கு அதே பகுதியை சேர்ந்த முகமது ஜெயின்,சதாம் உசேன், மற்றும் ஷேக் இஸ்மாயில் ஆகியோர் உதவி செய்துள்ளனர். அதன்பிறகு அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளர் அந்த பெண். ஒருகட்டத்தில் அவர்கள் இவரை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.
தேர்தல் பணிகளின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து தொடர்ந்து அவரை மிரட்டி வந்துள்ளனர். அதாவது, பணம் கொடுக்கவில்லை என்றால் வேறு யாரோ ஒருவரின் ஆபாச புகைப்படத்தில் இந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறியுள்ளார். அதோடு உறவினர்களுக்கும் அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணும் இவர்களின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் படிக்க | கல்லூரி மாணவி தற்கொலை. ஆசிரியர் திட்டியதாலா? காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை
ஒருகட்டத்தில் கடுப்பான அவர், ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி தன்னிடம் பணம் பறிப்பதாக அந்த மூன்று இளைஞர்கள் மீதும் புகார் அளித்துள்ளார், அவர் அளித்த புகாரின் பேரில் முகமது ஜெயின்,சதாம் உசேன், மற்றும் ஷேக் இஸ்மாயில் ஆகிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். அந்த மூவர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஆம்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்திய பின்பு ஆம்பூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மிரட்டலுக்கு பயப்படாமல் துணிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்த அந்த பெண்ணை போலீஸார் பாராட்டினர்.
மேலும் படிக்க | வாயில் சோற்றை அமுக்கி பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த கொடூரம்..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விருதுநகரில் பெண் ஒருவர் இதுபோன்று மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு கடந்த 6 மாதங்களாகவே ஆளாகி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஆம்பூரிலும் பெண் ஒருவர் மிரட்டப்பட்டுள்ளார். ஆனால் இவர் ஆரம்பத்திலேயே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR