பகீர் தகவல்: பிரிட்டனில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா தொற்று
பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் புதிய பிறழ்வு, இதுவரை உள்ள கொரோனா தொற்றை விட 70% வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா அதாவது கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு பரவி வருவாக செய்தி வெளியானது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ள நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தை வந்தாடைந்த பிரிட்டனைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது மேலும் பீதியை கிளம்பியுள்ளது.
பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் புதிய பிறழ்வு, இதுவரை உள்ள கொரோனா தொற்றை விட 70% வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைஅடுத்து செவ்வாய்க்கிழமை காலை விமான நிலையத்தை ஆய்வு செய்த மாநில சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், தொற்று ஏற்பட்ட பயணியின் சளி மாதிரி, மரபணு பகுப்பாய்வுக்காக புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கடந்த 10 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து மாநிலத்திற்கு வந்த பயணிகளை சுகாதாரத் துறை கண்காணித்து வருவதாகவும் கூறினார். பயணிகளின் இ-பாஸ் பட்டியலின் அடிப்படையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
கிண்டியின் கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள பிரத்யேக கோவிட் மருத்துவமனையில் பிரிட்டனில் இருந்து வந்த அந்த பயணி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அளித்த மருத்துவமனையின் மருத்துவர்கள். இந்த நோயாளிக்கு அறிகுறி ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
ALSO READ | கொரோனா தடுப்பூசி ஹலாலா ஹராமா.. இஸ்லாமிய மதகுருக்கள் கூறுவது என்ன..!!
திங்கள்கிழமை இரவு டெல்லி வழியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய அனைத்து பயணிகளையும் சுகாதாரத் துறை சோதனை செய்த பின்னர் இந்த குறிப்பிட்ட பயணிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது
இது குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அதைத் தடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் சுகாதாரச் செயலாளர் தெரிவித்தார்.
அரசு தனது அதிகார எல்லைக்குள் உள்ள மற்ற விமான நிலையங்களில் வந்தடையும் பயணிகளையும் கண்காணிக்கிறது.
விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஆர்டி பி.சி.ஆர் (RT PCR ) சோதனைகள் செய்வதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கொரோனா வைரஸ் புதிய பிறழ்வு குறித்த பீதியை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் கடந்த நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளன.
ALSO READ | இந்தியா இங்கிலாந்து இடையிலான விமானங்கள் ரத்து: பரவும் புதிய வகை கொரோனா வைரசின் தாக்கம்