கொரோனா தடுப்பூசி ஹலாலா ஹராமா.. இஸ்லாமிய மதகுருக்கள் கூறுவது என்ன..!!

ஒரு விலங்கிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளை கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படும்போது, ​​அது வெக்டர் தடுப்பூசி என அழைக்கப்படுவதாக மருத்துவ அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 21, 2020, 09:28 PM IST
  • கொரோனா தடுப்பூசி குறித்து பல விதமான கேள்விகள் எழுந்துள்ளன
  • தடுப்பூசியில் பன்றி இறைச்சி உள்ளதாக சந்தேகம் எழுப்பபட்டுள்ளது
  • இது தொடர்பான விவாதம் உலகம் முழுவதும் நடக்கிறது
கொரோனா தடுப்பூசி ஹலாலா ஹராமா.. இஸ்லாமிய  மதகுருக்கள் கூறுவது என்ன..!! title=

கொரோனா தடுப்பூசி இன்னும் பயன்பாட்டிற்கு  வரவில்லை, ஆனால் அது ஹலாலா அல்லது ஹராமா என்பது குறித்த விவாதம் தொடங்கியது. கொரோனாவின் தடுப்பூசி பற்றிய பல வதந்திகள் உலகளவில் வைரலாகி வருகிறது. அதை தயாரிக்க பன்றி இறைச்சி பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற வதந்தி பரவி வருகிறது. இப்போது தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து இஸ்லாம் சமூகத்தில் விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் சில முஸ்லீம் அறிஞர்கள்,  ஒரு நபரின் உயிரைக் காப்பாற்ற குர்ஆனில் ஹராமான பொருட்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

தடுப்பூசி நடவடிக்கைகள் பாதிக்கப்படுமா?
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பற்றி மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Dr.Harsh Vardhan) தகவல் அளித்த நிலையில், அத்தகைய வதந்தி பரவி வருகிறது. இதன் பின்னர், சில மதக் குழுக்கள் தடைசெய்யப்பட்ட பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து கேள்விகளை எழுப்பின, எனவே இப்போது தடுப்பூசி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

ALSO READ | Immunity-ஐ அள்ளிக் கொடுக்கும் வேம்பும் கற்றாழையும்..!!!

 

மதத் தலைவர்கள் கூறுவது என்ன
பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் கோவிட் -19 (COVID-19) தடுப்பூசி இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்று உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்களிடையே குழப்பம் நிலவுகிறது. இந்த விவாதம் குறித்து, இஸ்லாமிய அறிஞர் அதிகுர்ரஹ்மான் ரஹ்மான்  கூறுவது என்னவென்றால், ஒரு நபரின் உயிரைக் காப்பாற்ற குர்ஆனில் ஹராமான பொருட்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். உத்தரபிரதேசத்தின் முஸ்லீம் மதத் தலைவர்களில் ஒருவரான மவுலானா காலித் ரஷீத் ஃபிரங்கி மஹாலி, வதந்திகளை நம்பாமால் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் என தனது சமூக மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் கூறும் கருத்து
ஒரு விலங்கிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளை கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படும்போது, ​​அது வெக்டர் தடுப்பூசி என அழைக்கப்படுவதாக மருத்துவ அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) விஷயத்தில் இது போன்ற எதுவும் இல்லை. இந்தியன் பயோடெக் உடன் கொரோனா தடுப்பூசி தொடர்பாக பணிபுரியும் ஆராய்ச்சியாளரும் ஆலோசகருமான டாக்டர் சந்திரசேகர் கில்லூர்கர் கூறுகிறார், பன்றி மற்றும் கொரோனா தடுப்பூசிக்கு இடையே எந்த விதமான தொடர்பும் இல்லை என்கிறார்.

கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு நாட்டில் இன்னும் சில காலம் உள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில், தடுப்பூசி குறித்த வதந்திகளைத் தடுக்க விழிப்புணர்வை பரப்ப வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த வதந்தியின் காரணமாக ஒரு சமூகம் தடுப்பூசி பயன்படுத்த மறுத்தால், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும்.

ALSO READ | உருமாறும் கொரோனா குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை: ஹர்ஷ்வர்தன்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News