சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோருக்கு ஜூலை 5 ஆம் தேதி வரை உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் கே பழனிசாமி (Edappadi K Palaniswami) நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மா உணவகம் (Amma Canteens) மூலம் மாநில தலைநகரிலும், அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளிலும் தொடர்ந்து இலவசமாக உணவு வழங்கப்படும் என்றார். இந்த முயற்சியைச் செயல்படுத்த, சமூக சமையலறைகளை மேலும் வலுப்படுத்தவும், தேவைகளைப் பூர்த்தி செய்ய, போதுமான உணவை சமைக்கவும் அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள் என்றார்.


முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோரின் இல்லங்களில் இலவசமாக உணவை (Free Food) ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் தெரிவித்தார், இந்த முயற்சி முழுமையான ஊரடங்கு முடிவடையும் வரை அமலில் இருக்கும் என்றார்.


மேலும் செய்தி வாசிக்க: அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் - மு.க.ஸ்டாலின்


மேலும் செய்தி வாசிக்க: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு


ஒரு இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 19 முதல் அம்மா உணவகங்களில் (Amma Unavagam) இலவச உணவை வழங்கப்பட்டு வருகிறது. முதலில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 31.5.2020 வரை வழங்கப்பட்டு வந்தது.


தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் (Amma Unavagam in Chennai) விலையில்லாமல் உணவு வழங்க வேண்டும் என்றும், இது ஜூலை 5 ஆம் தேதி வரை கடைபிடிக்கவேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.