எண்ணூர் வாயு கசிவு... மீனவ மக்கள் வெளியேற்றம் - நடந்தது என்ன?
Chennai ammonia leak: சென்னை எண்ணூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுவால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் எனும் நிறுவனம் திருவொற்றியூர் தாலுகா எர்ணாவூர் கிராமத்தில் உரத் தொழிற்சாலை ஒன்றையும், கத்திவாக்கம் கிராமத்தில் அம்மோனியா சேமிப்பு கிடங்கு ஒன்றையும் இயக்கி வருகிறது. இந்த ஆலைக்கு கடற்கரையில் இருந்து 2 முதல் 3கி.மீ. தொலைவில் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலமாக வருகிறது. இந்த அம்மோனியா சேமிப்பு கிடங்கானது சுமார் 15 ஆயிரம் டன் அளவில் உள்ளதென கூறப்படுகிறது.
இந்த குழாயில் ஏற்பட்ட கசிவு காற்றில் கலந்து சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் கடும் நெடியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சமுதாய நலக்கூடம், தேவாலயங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 34க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் மூச்சு திணறல், கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற காரணங்களுக்காக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | சென்னையில் தொழிற்சாலை கேஸ் கசிவு! மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம்!
இந்த பகுதியை சேர்ந்த மக்களை மீட்கும் பணியில் 25க்கும் மேற்பட்ட108 ஆம்புலன்ஸ்கள் மேற்பட்ட மாநகர பேருந்துகள், வாகனங்கள் காவல்துறையினரும்
ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவத்திடையே திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினருக்கு பி. சங்கர் மண்டல குழு தலைவர் தனியரசு மேற்கு பகுதி செயலாளர் அருள்தாசன், அதிமுக கட்சியை சேர்ந்த ஏழாவது வார்டு கவுன்சிலரான கே கார்த்திக் ஆகியோர் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தங்களுடைய ஏற்பாட்டில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். சட்டமன்ற உறுப்பினர் தனது இல்லத்தின் முன்பு பந்தல் போட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக தங்க வைத்தார்.
வாயு கசிவு குறித்து பேசிய எண்ணூர் மக்கள், "ஆண்டு தோறும் ஒவ்வொரு மழை காலங்களிலும் அந்த ஃபேக்டரில் இருந்து இவ்வாறாக கசிவுகள் கசிய தொடங்கும். இப்போதும் நடந்துள்ளது. எங்களுக்கு நிவாரணம் எல்லாம் தேவையில்லை. அந்த நிறுவனத்தை நிரந்தரமாக இழுத்து மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தாங்கள் இனி தினந்தோறும் அச்சத்துடனே தங்களுடைய வாழ்வை கடந்து செல்லக்கூடிய சூழல் ஏற்படும்" என்று தெரிவித்தனர்
நள்ளிரவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரி சமீரன், கசிவுகளுக்கான காரணம் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில் தற்போது தான் இந்த பகுதியில் எண்ணெய் கழிவின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து மீண்டும் இந்த வாயு கசிவால் மீன்கள் இறால்கள் போன்றவை இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இது போன்ற பேக்டரிகளில் முறையாக குழாய்களை பராமரிக்காததே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என கூறப்படுகிறது. சுற்றுசூழல் மற்றும் மாசுகட்டுபாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்திருக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வாயு கசிவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எண்ணூரில் கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததை உறுதி செய்தனர். ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 இருக்க வேண்டிய அமோனியா 2090 microgram/m3 இருந்தது. கடலில் 5 mg/L இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தமிழ் நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இனி இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது... முழு பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ