பெய்ரூட் அபாயத்தில் தமிழகம் தப்ப.... இடம் மாறுகிறது அமோனியம் நைட்ரேட்... !!!
லெப்னானில் உள்ள பெய்ரூட்டில், 2750 டன் அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
சென்ற வாரம் பெய்ரூட்டில் நடந்த உலகையே உலுக்கிய வெடிப்பு சம்பவத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டோம். இந்த வெடிப்பு சம்பவத்தில் 135திற்கும் அதிகமானோர் இறந்து விட்டனர். ஆயிரக்கணாகானோரை காணவில்லை.
இந்த வெடிப்பு சம்பவத்தின் காரணமாக, அந்நகரத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து விட்டனர்.
ஆயிரக்கணக்காணோர் மிக மோசமாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
லெப்னானில் உள்ள பெய்ரூட்டில், 2750 டன் அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
ALSO READ | Beirut போலவே மும்பையில் 76 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி தெரியுமா..!!!
இந்த சம்பவத்தின் பாதிப்பினால் பில்லியன் கணக்கான டாலர் இழப்பு லெபனானுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்வத்தை அடுத்து, தமிழ் நாட்டில் உள்ள மணலியில் உள்ள ஒரு கிடங்கில் அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருப்பதால், அனைவர் கவனமும் அதன் மீது விழுந்தது.
பெய்ரூட் போன்ற சம்பவம் நேரிட்டால், ஏற்படும் பாதிப்பு மிக மோசமானதாக இருக்கும் என்பதால், பல விதமான எச்சரிக்கை குரல்கள் ஒலிக்க தொடங்கின.
அங்கே சுமார் 740 டன் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான அளவிலான அமோனியம் நைட்ரேட் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்படிருப்பது ஆபத்து என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதை அடுத்து, சேமித்து வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் விரைவில் விற்பனை செய்யப்படும் என அரசு உறுதி அளித்தது.
ALSO READ | கோவை உயிரியல் பூங்காவில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு...!!!
இதை அடுத்து, தற்போது சென்னையில் உள்ள மணலியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேடை கண்டெய்னர்கள் மூலம் கொண்டு சென்று இடம் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக இந்த அமோனியம் நைட்ரேட்டை வாங்கியுள்ள ஒரு ஹைதராபாத் நிறுவனத்திற்கு, 10 கண்டெய்னர்கள் அனுப்பபட உள்ளன.