Beirut போலவே மும்பையில் 76 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி தெரியுமா..!!!

பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தை போலவே 1944 ஏப்ரல் 14, அன்று மும்பையில் கப்பல் நிறுத்துமிடத்தில், பயங்கரமான வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது.

Last Updated : Aug 6, 2020, 06:15 PM IST
  • மும்பையில், 76 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை கட்டுப்படுத்த 3 நாட்கள் ஆனது.
    ​​
    இதனால் ஏற்பட்ட சுமார் 5 லட்சம் டன் குப்பைகளை அகற்ற 8000 பேர், தொடர்ச்சியாக ஏழு மாதங்கள்பணியாற்றினர்.
  • சுமார் 71 தீயணைப்பு வீரர்களும் உயிர் இழந்தனர்.
Beirut போலவே மும்பையில் 76 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி தெரியுமா..!!! title=

பெய்ரூட் குண்டுவெடிப்பைப் போலவே, 76 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை ஒரு பெரிய கப்பல் நிறுத்தும் இடத்தில் பயங்கர வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தை போலவே 1944 ஏப்ரல் 14, அன்று மும்பையில் கப்பல் நிறுத்துமிடத்தில், பயங்கரமான வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. அதில்  700 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 2,500 பேர் காயமடைந்தனர்.

துறைமுக நகரத்தில் ஏற்பட்ட அந்த  பயங்கர வெடிப்பு வெடித்சம்பவத்தில், அருகில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன.  வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்தன.

ALSO READ | பெய்ரூட் குண்டு வெடிப்பு: வைரல் வீடியோவில் காணப்பட்ட கொடூரங்கள்....See Video

பெய்ரூட்டிலிருந்து பல பயங்கரமான படங்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. 100 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். 4000 பேர் காயமடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பயங்கர வெடிப்பால் இடம்பெயர்ந்து வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

1944 ஏப்ரல் 14ம் தேதி  பம்பாயில் உள்ள கப்பல் நிறுத்துமிடத்தில்  ஏற்பட்ட S.S Fort Stikine என்று அழைக்கப்படும் அந்த வெடிப்பு சம்பவம்,  இந்திய வரலாற்றில் மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாகும்.

நடந்தது என்ன?

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரத்தில், மும்பையின் விக்டோரியா டாக் எனப்படும் கப்பல் நிறுத்துமிடத்தில், ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. SS Fort Stikine சரக்கு கப்பலில்  தீப்பிடித்தது. இந்த கப்பலில் நூற்றுக்கணக்கான பருத்தி மூட்டைகள், தங்கம் மற்றும் 300 டன் டிரினிட்ரோடோலூயீன் (TNT அல்லது டைனமைட்) ஆகியவை இருந்தன.  அப்போது, கப்பலில் இரண்டு பெரிய குண்டுவெடிப்புகளில், அதில் உள்ள பொருட்கள் எங்கும் சிதறின. சுற்றியுள்ள கப்பல்களை மூழ்கடித்து, அந்த பகுதியில் தீ பரவியது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின்போது வெடிப்பு நிகழ்ந்ததால், ஆரம்பத்தில் இது ஜப்பானிய நாசவேலை தான் காரணம் என்று சிலர் கூறினர். ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கவனக்குறைவின் காரணமாக ஏற்பட்ட விபத்து என தெரியவந்தது.

ALSO READ | உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்

இதனால் ஏற்பட்ட சுமார் 5 லட்சம் டன் குப்பைகளை அகற்ற 8000 பேர், தொடர்ச்சியாக  ஏழு மாதங்கள்பணியாற்றினர். தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆனது.

வேகமாக பரவிய தீயை அணைக்க முயன்றபோது, ​​ சுமார் 71 தீயணைப்பு வீரர்களும் உயிர் இழந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் நினைவாக, ஏப்ரல் 14ம் தேதி மும்பையில் தீயணைப்பு படையினர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Trending News