கோவை உயிரியல் பூங்காவில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு...!!!

கண்ணாடி விரியன் என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியவில் அதிகம் காணப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2020, 09:23 PM IST
  • கண்ணாடி விரியன் பாம்புகள் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகின்றன.
  • இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய நான்கு வகை பாம்புகள் காரணமாக இருக்கின்றன.
  • தடித்த உடலுடன் பெரிய முக்கோண வடிவ தலை கொண்ட இந்த கண்ணாடி விரியன் பாம்பு பெரிய மூக்கு துவாரம் உடையதாகவும் காணப்படும்.
கோவை உயிரியல் பூங்காவில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு...!!! title=

கோயம்புத்தூரில் உள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் இரு கண்ணாடி விரியன் பாம்பு 33 குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்த பாம்பு குட்டிகள் அணைக்கட்டு காட்டுப்பகுதியில் விடப்படும் என கூறப்படுகிறது.

கண்ணாடி விரியன் (Russel's Viper, Daboia russelii) என்பது மிகவும் நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இந்தியாவில்  பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய நான்கு வகை பாம்புகள் காரணமாக இருக்கின்றன. இதில் இந்த கண்னாடி விரியன் வகை ஒன்று.

இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியவில் அதிகம் காணப்படுகிறது. தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளிலும் அதிகம் காணப்படுகின்றன. 

தடித்த உடலுடன் பெரிய முக்கோண வடிவ தலை கொண்ட இந்த கண்ணாடி விரியன் பாம்பு பெரிய மூக்கு துவாரம் உடையதாகவும் காணப்படும்.

ALSO READ | ஆர்டிக் வெப்பம்: கனடாவில் 4000 ஆண்டு பழமையான கடைசி பனிக்கட்டி தொடரும் உடைந்தது!!!

இந்த உயிரியல் பூங்காவில், மான், மயில், ஆமை, கிளி வகைகள், முதலைகள் போன்றவை காணப்படுகின்றன. 

கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அமலில், பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. 

கண்ணாடி விரியன் ஈன்ற 33 பாம்பு குட்டுகளும் ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ | பலூன் போல பெருத்துக் கொண்டே போகும் வயிறு; மர்மமான நோய்.. அவதிப்படும் பெண்..

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பாக, இதே கோயம்புத்தூரில், ஒருவரது வீட்டின் குளியலறையில் ஒரு கண்ணாடி விரியன் பாம்பு பிடிப்பட்டது. 

அதை வனப்பகுதிக்கும் கொண்டு செல்லும் போது, அதுவும் இதே போன்று சுமார் 35 குட்டிகளை  ஈன்றது. 

Trending News