பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: விசாரணையை தொடங்கினார் அமுதா ஐஏஎஸ் - முழு விவரம் இதோ!
Ambasamudram Custodial Torture Issue Investigation: விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இன்று நெல்லையில் விசாரணையை தொடங்கினார்.
Ambasamudram Custodial Torture Issue Investigation: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் விசாரணை அழைத்து செல்லப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் எழுந்த புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு புகார் வந்தது. தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நீதி விசாரணை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார்.
அரசு உத்தரவு
தொடர்ந்து ஏப். 26ஆம் தேதி முதல் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்பாசமுத்திரம், வி.கே. புரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களிலும் இருக்கும் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பணியிட நீக்கம் செய்யப்பட்டார். இதுதவிர மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட உளவுத்துறை ஆய்வாளர் அம்பாசமுத்திரம், விகே புரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தனி பிரிவு உதவி ஆய்வாளர் உளவு பிரிவு காவலர்கள் தனி பிரிவு காவலர்கள் என எட்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப். 3ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆழம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
விசாரணை அதிகாரி வருகை
விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் அமுதா நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி அமுதா இன்றைய தினம் (ஏப். 9) சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தார்.
அங்கு அவரை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆழம் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையும் உயர்நிலை விசாரணை அதிகாரியான அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் புகாரளிக்கலாம்
அதன் படி விசாரணை அலுவலர் நாளை (ஏப். 10) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் காவல்துறையால் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விசாரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்புபவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்குமூலங்களை அளிக்க விரும்புவோர் நாளை (10.04.2023) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம்.
மேலும் ஏற்கனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க விரும்பினாலோ, புகார் அல்லது கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ அவர்களும் நேரில் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து புகாரை தெரிவிக்கலாம்.
மேலும் விசாரணை அலுவலரிடம் நேரடியாக புகார் அளிக்க இயலாதவர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ +918248887233 என்ற தொலைபேசி எண்ணிலோ அதே வாட்ஸ் அப் எண்ணிலோ (10.04.2023 காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை) புகார் அளிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கடைகளுக்கு முதலமைச்சர் உத்தரவு - அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ