வந்தேபாரத் ரயில் அட்டவணை
பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்திருக்கும் வந்தே பாரத் ரயில் வாரத்தில் 6 நாட்கள் சென்னை - கோவை இடையே இயக்கப்படும். புதன்கிழமை மட்டும் இயங்காது. கோவையில் இருந்து சென்னை 5 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்றடையும். சேலம், திருப்பூர், ஈரோடு ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும்.
மேலும் படிக்க | அண்ணாமலை வாடகை தாயாக இருந்தே பழகியவர் - கி.வீரமணி!
வந்தேபாரத் ரயில் சிறப்பம்சங்கள்
வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. சராசரியாக 110 கி.மீ வேகதிதல் இயக்கப்படும் இந்த ரயில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் ஒப்பிடுகையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக கோவையை அடையும். சொகுசு வசதிகளைப் பொறுத்த வரையில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள், 180 டிகிரி சுழலக்குடிய இருக்கைகள் இருக்கும். ரயிலில் பயணிக்கும் பயணிகளின் முழுமையான பாதுகாப்பிற்காக ரயிலின் 16 பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் முழுவதுமாக நிறுத்தப்படும் போதுதான் ரயிலின் தானியங்கி கதவுகள் திறக்கப்படும். கதவுகள் முழுவதுமாக பூட்டப்பட்டால்தான் ரயில் புறப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வசதி
வந்தே பாரத் விரைவு ரயிலின் சில பெட்டிகளில் சக்கர நாற்காலிகளை நிறுத்துவதற்கு இடவசதி இருக்கும், இதனால் மாற்றுத்திறனாளிகள் எந்த வித சிரமத்தையும் சந்திக்காமல் ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும், அனைத்து பயணிகளும் தங்கள் கொண்டு வரும் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வைத்துக் கொள்ளும் வகையில் மேலடுக்கு இடவசதி கொடுக்கப்பட்டிருக்கும். ரயிலிலேயே சிறந்த உணவுகள் வழங்கப்படும்.
வந்தேபாரத் ரயில் கட்டண விபரம்
சென்னை - கோவை இடையே பயணிக்கும் வந்தே பாரத் ரயிலின் முழுமையான கட்டண விபரம்.
சென்னை - சேலம் ஏசியில் பயணிக்கும் பயணிகள் ரூ. 1,740 செலுத்த வேண்டும், ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிப்பவர்கள் ரூ.895 செலுத்த வேண்டும். சென்னை - ஈரோடு பயணிப்பவர்கள் ஏசி அல்லாத பெட்டிகளுக்கு ரூ.985, ஏசி பெட்டிகளுக்கு ரூ.1,930 செலுத்த வேண்டும். சென்னை - திருப்பூர் இடையே பயணிக்கும் பயணிகள் ஏசி அல்லாத பெட்டிகளுக்கு ரூ.1,280, ஏசி பெட்டிகளுக்கு ரூ.2,325 செலுத்த வேண்டும். சென்னை - கோவை பயணிப்பவர்கள் ஏசி அல்லாத பெட்டிகளுக்கு ரூ.1,365, ஏசி பயணத்துக்கு ரூ.2,485 செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்த பிரதமர் மோடி! வைரலாகும் படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ