கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்து, அதனை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நாட்டில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட மொத்தம் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 31 ஆம் தேதி வரை, இந்த உத்தரவை நீடிக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் உத்தரவை குறித்து முடிவெடுக்க, சென்னை தலைமை செயலகத்தில் மூத்த மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்து, அதனை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மேலும், தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்க தடையில்லை. அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும், போதுமான அளவு மருந்து கையிருப்பில் உள்ளன. மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படும். 


கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது" என அவர் தெரிவித்துள்ளார். மேலும், போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்றும், மத்திய, மாநில அரசுகள் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.