ஒகேனக்கல் ஆலம்பாடி பகுதியில் கடலூர் அடுத்த எஸ். புதூர் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சந்தோஷ் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தலம் அமைந்துள்ளது இந்த சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் வந்து செல்வது வழக்கம்.


அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளித்து மகிழ்வர் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ஆபத்தான பகுதிகளில் குளித்து வருவதும் மதுபோதையில் குளித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.


அவ்வாறு குளிக்கும் சுற்றுலா பயணிகள் ஒரு சிலர் ஆற்றில் அடித்துச் செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில்  கடலூர் மாவட்டம் தொண்டமானத்தம் அடுத்த எஸ். புதூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சந்தோஷ் வயது 34 இவர் அவரது சொந்த கிராமத்தில்  விவசாயம் செய்து வருகிறார்.


மேலும் படிக்க | கைலாசாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு தூது விடும் நித்தி - அடுத்த அலப்பறை


 இவருக்கு திருமணமாகி நித்தியா என்ற மனைவியும் அஜய் என்ற 7 வயது மகனும் உள்ளனர் அவரது மனைவி நித்யா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.


சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருடன் இன்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா வந்தவர்கள் முதலைப் பண்ணை மற்றும் தொங்குபாலம் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்த பின்பு ஆலாம்பாடி பகுதியில் குளித்துள்ளனர். 


சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது சந்தோஷ் நீச்சல் தெரியாமல் ஆழமான இடத்துக்குச் சென்று சுழலில் சிக்கி தத்தளித்து உள்ளார். இதனைக் கண்ட நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கிவிட்டார். 


 அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்கு பின்பு சந்தோஷ் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


இச்சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் உடன் வந்த நண்பர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | முன்னாள் ராணுவ வீரர்கள் செய்யும் செயலா இது? தட்டிக்கேட்ட வனக்காவலருக்கு கத்திக்குத்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR