தமிழக ஆற்றுப்படுகைகளில், மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை  அரசு கடந்த 2003-ம் ஆண்டு ரத்து செய்தது.  அதன் பின்னர், மணல் குவாரியை தமிழக பொதுப்பணித்துறை நடத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் ஆற்றுப்படுகைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், அதிகமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததுடன். குடிநீர் தட்டுப்பாடும், விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


அரசு ஒரு லாரி லோடு மணலை ரூ.1,030-க்கு விற்கிறது. ஆனால், பொதுமக்கள் ஒரு லாரி லோடு மணலை ரூ.50 ஆயிரம் கொடுத்து வாங்குகின்றனர்.  பொதுப்பணித்துறை அதிகாரிகளும், இதற்கு உடந்தையாக செயல்படுகின்றது .


இதை விசாரித்த ஐகோர்ட்டு, தாமிரபரணி, கொசஸ்தலை, பாலாறு ஆகிய ஆறுகளில் மணல் அள்ளத் தடை விதித்தது. தமிழகத்தில் தற்போது 31 இடங்களில் செயல்படும் மணல் குவாரிகளில் இருந்து, தினமும் 8 ஆயிரத்து 300 லாரி லோடுகள் மணல்  அள்ளப்படுவதாக பொதுப்பணித்துறை கூறுகிறது. ஆனால், தினமும் பல்லாயிரக்கணக்கான லாரி லோடுகள் மணல் சட்ட விரோதமாக அள்ளப்படுகின்றன.


இதுகுறித்து, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த குழுவுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கப்படாததால், நீதிபதி பத்மநாபன் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய ,நிலை எற்பட்டதை  தொடர்ந்து, சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.


இதை  தொடர்ந்து, தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்கக்கோரி கடந்த ஆகஸ்டு 16-ந் தேதி சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்தும்.  அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


எனவே, சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் குழு அமைத்து, இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாக,   மணல் அள்ளி நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைக்க வேண்டும்.


என்றும் ஆறுகள், நீர் நிலைகள் மற்றும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உடனடியாக அனைத்து மணல் குவாரிகளையும் , இழுத்து மூட இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.   இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.