அல்லு அர்ஜுனை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்... எதற்கு தெரியுமா?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் இவர் நடித்து வெளியான புஷ்பா படம் வரவேற்பை பெற்ற சூழலில் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் புகையிலை நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டது. ஆனால், ‘நான் புகையிலை விளம்பரத்தில் நடித்தால் எனது ரசிகர்கள் தவறான திசைக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதை கண்டிப்பாக செய்ய மாட்டேன்’ என அவர் மறுத்துவிட்டார். அவரது இந்த முடிவுக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது!
நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன்.
புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | உலக ட்ரெண்டிங்கில் ராக்கி பாய்: K.G.F-ஐ சிலாகித்த Manchester City கால்பந்து அணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR