முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டிய அன்புமணி ராமதாஸ்!
Anbumani Ramadoss : ‘எந்த’ விவகாரத்தில் பாராட்டும், விமர்சனமும் கிடைத்ததோ இல்லையோ, ‘இந்த’ விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி. இவ்வளவு பிரம்மாண்டப் போட்டியையும், நிகழ்ச்சிகளையும் தமிழக அரசால் நடத்த முடியுமா என்று பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், அனைவரும் புருவம் உயர்த்தும் அளவுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது தமிழக அரசு. ஏர்போர்ட்டில் விசா செக்கிங் நடைமுறை முதல் தங்கும் அறையின் செக்-இன், செக்-அவுட் நடைமுறை வரை அனைத்து ஏற்பாடுகளையும் வெகு இயல்பாகவும், நேர்த்தியாகவும் செய்துகொடுத்ததாக தமிழக அரசை வெளிநாட்டு செஸ் வீரர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் தாலிபான் - வெடித்தது சர்ச்சை
இந்நிலையில், தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது,
‘சென்னையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டுகள் தோன்றிய வரலாறு, தமிழர்களின் வலிமை ஆகியவை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டப்பட்டன. ஒட்டுமொத்த உலகமும் இதை பார்த்து அறிந்தது!.
சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்கவிழாவும், மாமல்லபுரத்தில் நடந்த போட்டிகளும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. இவற்றைக் கண்டு தமிழன் என்ற முறையில் நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன்!.
செஸ் ஒலிம்பியாடையும், அதன் தொடக்க, நிறைவு விழாக்களையும் மிகச்சிறப்பாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும், விழாக்களை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் நிகல் சரின், அர்ஜுன், மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!’
என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு தரப்பினர் தமிழக அரசின் விழா ஏற்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் போஸ்டர் தமிழர்களுக்கான அவமானம் - கொந்தளித்த சீமான்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ