சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில்  பாமக சார்பில் துணை அமைப்புகள் மற்றும் பாமக பல்வேறு அணிகளின் நிர்வாகிகளுடனும் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், 
‘நான் பாமக தலைவராக பொறுப்பேற்றதும் முதல்வர், எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பாமக சார்பில்  34 துணை அமைப்புகளை சார்ந்த தலைவர்கள், செயலாளர்களை சந்தித்து செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். 2.0 சமந்தமாக உத்திகளை, வியூங்களை அமைக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.  பாமக வின் அணுகுமுறை வேளாண், நீர் வேளாண், கால நிலை மாற்றம், மது சார்ந்த பிரச்சனை, போதை பழக்கம், ஆன்லைன் சூதாட்டம்,வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  அடுத்த தலைமுறையை பாதுகாக்கும் நோக்கம்,சமூக நீதி சார்ந்த பிரச்சனை ஆகியவற்றை மையப்படுத்தி எங்களது அணுகுமுறை இருக்கும் என்றார். 


மேலும் படிக்க | எத்தனை சாதனைகளைச் செய்தாலும் பெயர் என்னவோ சாதிக் கட்சிதான் - அன்புமணி வேதனை


காலை முதல்வரை சந்தித்தபோது இரண்டு செய்தியை தெளிவு படுத்தினேன். ஒன்று,  முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்குபெற்று ஒரு கூட்டத்தை நடத்தி போதை பொருளிலிருந்து தமிழகத்தை காப்பது,  அடுத்த தலைமுறையை குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது தான். காவல்துறைக்கு தெரியாமல் போதை பொருட்கள் மாணவர்கள் மத்தியில் விற்பனையாகாது . ஆகவே முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். 


போதை பழக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக சுமார்  4500பேர் மீது வழக்கு பதிவு செய்ததாக அரசு  தெரிவிக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பெற்றோர் சார்பாக எங்களின் கோரிக்கையாகும். 2வதாக, பூரண மதுவிலக்கு தொடர்பாக செயல் திட்டத்தை,  அரசானது மக்களிடையே தெளிவுடுத்த வேண்டும். தேர்தல் அறிக்கையில் இருப்பதை திமுக எப்படி நடைமுறை படுத்துவார்கள் என செயல் திட்டம் கொடுக்க வேண்டும். 


எங்களை பொருத்த வரை காலநிலை மாற்றத்திற்கு முக்கிய துவம் கொடுக்க வேண்டும். மழை,வெயில் காலத்தில் அதற்கு தற்காலிக தீர்வுவைத்தான் அரசு காண்கிறது. ஆனால் இங்கு குடியேறி வருவோர்களால்  நகரமயமாதல் அதிகமாவதால் ,அரசு தொலைனோக்கு பார்வை ,திட்டமிடுதல் வேண்டும். காற்று மாசு, தொடர்பாக ஜீன் மாதம் ஆவணத்தை பாமக சார்பில் வெளியிட உள்ளோம். ஆன்லைன் சூது விவகாரத்தில் அரசு உடனடியாக சட்ட திருத்தத்தை கொண்டுவர வேண்டும். 


அதேபோல், 10.5% இட ஒதுக்கீடு சட்டமாக கொண்டுவருவது தொடர்பாக சட்ட சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். சாதிப் பிரச்சனையாகப் பாராமல் சமூக பிரச்சனையாக பார்த்து அவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கு வேண்டும். உச்சநீதிமன்றம் உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கு தடை இல்லை என்று கூறியுள்ளது.  ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று கலைஞர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடியை வலியுறுத்தி வந்தோம். 


அதற்கும் 10.5% இட ஒதுக்கீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.  தமிழகத்தில் மிகப்பெரும் சாபக்கேடு மது பழக்கம் தான். இதனால் தான் அதிமானோர் இறக்கின்றனர். இந்தியாவில் மது அதிகம் விற்பனையாவது தமிழகத்தில், அதனால் இளம் விதவைகள், அதிக சாலை விபத்து நடக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை இங்கு அதிகம் அதற்கு காரணம் மது தான். பள்ளி மாணவர்கள் குடித்து வகுப்பறையில் ஆசிரியர் முன்பு வாந்தி எடுப்பது,  பள்ளி மாணவிகளும் மதுவிற்கு அடிமையாகிறார்கள். இதனால் அண்ணா கனவை நிறைவேற்ற அரசு ல், தமிழகத்தில் முழுமையான மது விலக்கு அல்லது படிப்படியாக மது விலக்கை கொண்டு வர வேண்டும். 


மேலும் படிக்க | பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சரின் அட்வைஸ்


அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டுமானால் மதுவை ஒழிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் மூத்த தலைவர்களை அடுத்து அடுத்த சந்திக்க இருக்கிறேன். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாகவே பாமகவின் 2.0 திட்டம் கொண்டுவந்து செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு முக்கியத்துவம்,முன்னுரிமை கொடுத்துள்ளோம். இத்தனை ஆண்டுகள் பாமக ஆட்சிக்கு வராமல், பெரிய அளவில் வெற்றி பெறாததற்கு தொண்டர்கள் மட்டுமே காரணமில்லை. தலைவர்களாகிய நாங்களும் தான். வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவோம். 


மாற்றம் முன்னேற்றம் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் வாக்காக மாற்றவில்லை. மக்கள் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கிறது. தமிழகத்தில் அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகள் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. எங்களின் இலக்கு 2026ஆம் ஆண்டு ஆட்சியில் அமர வேண்டும். அதற்கு ஏற்றார் போல் எங்களது வியூகம், யுத்தி இருக்கும். பல்வேறு காலகட்டத்தில் நாங்கள் சரியான பாதையில் செல்லவில்லை. அப்போது இருந்த அரசியல் வேறு, தற்போது இருக்கும் அரசியல் வேறு. 


பணத்தை வைத்து தற்போது அரசியல் நடைபெறுகிறது. ஆனால் அதை முறியடிப்போம். சாதி கட்சி என்று எங்கள் மீது தினித்துள்ளனர்.ஆனால் அதை தாண்டி எங்களது கட்சி செயல்பட்டுள்ளது,செயல்பட்டும் வருகிறது என்பதற்கு உதாரணம் எங்களின் மாதிரி பட்ஜெட் தான். பாமக இந்தியாவிற்கும்,தமிழகத்திற்கும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. அதை மறைக்க திராவிட கட்சிகள் எங்களை சாதிக் கட்சி என்று முத்திரை குத்தியுள்ளன. ஆனால் பாமக என்பது சமூக நீதி கட்சி என்பதை நிரூபிப்போம். பொது மேடையில் தமிழகத்தின் பிரச்சனையை நாகரீகமான முறையில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR