பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சரின் அட்வைஸ்

பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அன்புமணி ராமதாஸுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 28, 2022, 06:33 PM IST
  • பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி ராமதாஸ்
  • அன்புமணி ராமதாஸுக்கு ஸ்டாலின் வாழ்த்து
  • அன்புமணிக்கு அட்வைஸ் செய்த மு.க. ஸ்டாலின்
 பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சரின் அட்வைஸ் title=

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடந்தது. இந்த பொதுக்குழுவுக்கு ஜி.கெ.எ மணி தலைமை தாங்க, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

இதற்கிடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக தலைவராக பணியாற்றிய ஜி.கே. மணிக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்தச் சூழலில் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்புமணி ராமதாஸுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டுமென கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தினர்.

Anbumani Ramdoss

இதனையடுத்து அன்புமணி ராமதாஸை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை பாமக தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எனவே பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். வருகின்ற தலைமுறையை காக்க 2026-ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். திராவிட மாடல் என அவர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | பாமக தலைவர் ஆனார் அன்புமணி ராமதாஸ்

அவர்கள் திராவிட மாடல் என்கின்றனர். நாம் பாட்டாளி மாடல் என்கிறோம். தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை, தமிழகத்தை ஜார்கண்டோடு ஒப்பிடக்கூடாது. சிங்கப்பூருடன்தான் ஒப்பிட வேண்டும். 

உலகளவில் ஒரு பெரிய தலைவர் என்றால் அது அம்பேத்கர்தான். இந்தியாவிலேயே காந்திக்கு ந்நிகரானவர். அவரை ஒரு குறிகிய வட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாய தலைவராக ஆக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.

மேலும் படிக்க | அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?

இந்நிலையில் பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அன்புமணி ராமதாஸுக்கு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு வாழ்த்துகள். சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News