உருவ கேலி செய்ததால் ஆத்திரம்! நண்பனை கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவன்.!
உருவகேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த மாணவன் சக நண்பனை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்சி பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் கோகுல்ராஜ்.இவர் கடந்த 15ஆம் தேதி இரவு தனது நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், அன்று இரவு மகன் வீடு திரும்பாததால் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.அது மட்டுமின்றி மாணவனின் நண்பர்கள் பலரிடமும் கோகுல்ராஜ் குறித்து விசாரித்துள்ளனர்.
இருப்பினும் கோகுல்ராஜ் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் அச்சம் அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதே நேரம் அன்று இரவு, திருக்கோவிலூர் புறவழிச்சாலை அருகே உள்ள கோகுல்ராஜ் படித்து வந்த பள்ளியின் பின்புறம் அரிவாளால் வெட்டப்பட்டு உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு அது கோகுல்ராஜ்தான் என அடையாளம் கண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | பெண்களுக்கு பேய் ஓட்டும் வினோத திருவிழா.!
விசாரணையில் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் கோகுல்ராஜூடன் பயின்ற சக மாணவர் ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த மாணவர் கோகுல்ராஜ் தன்னை தொடர்ந்து குண்டாக இருப்பதாக கூறி உடல் கேலி செய்ததாகவும், பலமுறை எச்சரித்தும் கோகுல்ராஜ் தன்னை தொடர்ந்து கிண்டல் செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் தான் ஆத்திரம் அடைந்து கோகுல்ராஜை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறிய மாணவன் பள்ளிக்கு பின்புறம் வைத்து உணவு உட்கொண்டுவிட்டு ஓய்வெடுத்த கோகுல்ராஜை அரிவாளால் பின்புறம் இருந்து வெட்டியதாகவும், ஆத்திரம் தீர கத்தியால் கோகுல்ராஜின் உடலை கீறியதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து மாணவரை கொலை குற்ற வழக்கில் கைது செய்த போலீஸார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர். உருவகேலி செய்ததால் நண்பனை நண்பனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்! 65 வயது முதியவர் கைது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR