எனக்கு சரக்கு இல்லையா?! கோபத்தில் கேட்டை உடைத்த குடிமகன்..
குடிப்பதற்கு மது கொடுக்க மறுத்ததால் ஹோட்டல் கேட்டை கார் விட்டு ஏற்றி உடைத்த இளைஞர்.
சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலுக்கு காரில் வந்த இளைஞர் ஒருவர் அந்த ஒட்டலில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இளைஞரின் வயது குறைவாக இருப்பதால் அரசின் சட்ட அறிவுறுத்தலின்படி மது அருந்த அனுமதிக்க முடியாது என கூறி உள்ளனர்.
உடனே அதற்கு அந்த இளைஞர் கூச்சலிட்டு ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இருப்பினும் ஊழியர்கள் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என கூறிவிட்டதால் ஹோட்டலில் இருந்து வெளியேறி பார்க்கிங்கில் இருந்த தனது காரில் ஏறிய இளைஞர் காரை வேகமாக எடுத்து கொண்டு வெளியே வந்தார்.
மேலும் படிக்க | வீடுகட்ட இடையூறு... நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் முன்பு தீ குளிக்க முயற்சி!
வெளியே வந்த வேகத்தில் ஹோட்டலின் முகப்பில் இருந்த இரும்பு கேட்டின் மீது காரை மோதி உள்ளார். இதனால் அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் சிதறி ஓடியிருக்கின்றனர். கேட்டை உடைத்து கொண்டு வெளியேறிய காரை சாலையின் நடுவே சென்று நிறுத்தி இருக்கிறார்.சென்னையின் பிரதான பகுதியான கிண்டியின் மையப்பகுதியில் இந்த விபத்து நடந்ததால் சென்னையிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது காரில் காயம் அடைந்து இருந்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இரும்பு கேட்டுடன் இருந்த காரை பொக்லைன் உதவியுடன் போலீசார் அகற்றினார். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | முன்னாள் மனைவி மீது டி.இமான் பரபரப்பு புகார் - என்ன காரணம் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR