முன்னாள் மனைவி மீது டி.இமான் பரபரப்பு புகார் - என்ன காரணம் தெரியுமா?

குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2022, 03:03 PM IST
  • தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி
  • முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை கோரி டி.இமான் வழக்கு
  • பதிலளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் மனைவி மீது டி.இமான் பரபரப்பு புகார் - என்ன காரணம் தெரியுமா?  title=

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். ரஜினி, அஜித், விஜய் என சூப்பர் ஸ்டார்களுக்கு இசையமைத்துள்ள டி.இமான் 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்ணான கண்ணே' பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். 

டி.இமானுக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மனைவியை விட்டு பிரிந்தாலும் குழந்தைகளை சந்திக்க இமானுக்கு குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. குழந்தைகளின் பாஸ்போர்ட்களை தற்போது டி.இமான் வைத்துள்ளார். 

இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | டொரண்டோ தமிழ் இருக்கைக்கு டி.இமான் வாழ்த்துப்பாடல்!

iman

அந்த மனுவில், ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், தனது மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் கோரி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும், அதை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளை சந்திக்க விடாமல் செய்யும் வகையில், அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக தவறான தகவலை அளித்து மோனிகா புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த்,  தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க | எளிமையின் உருவமான ரஜினிகாந்தை சந்தித்தேன். அவரது வார்த்தைகள் ஊக்கமளித்தன: டி.இமான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News