'நீட்' தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடல தகனம் செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 


அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்தால் இவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அனித்தா தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


அவரது தற்கொலை தமிழக அரசியல் சூழ் நிலையை பரபரப்படைய செய்துள்ளது. அனிதாவின் தற்கொலைக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலர் அனுதாபங்களை தெரிவித்தனர்.
 
இந்நிலையில் அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான குழுமூர் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.