அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி பாஜக போராட்டம்-அண்ணாமலை அறிவிப்பு!
அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கக்கோரி வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசி, சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளியொட்டி அரசு அறிவித்திருந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
பயன்பெற்றவர்கள்:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 1.06 கோடிபெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று, மகளிர் உரிமைத்தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் இந்த தொகை செலுத்தப்படும். அப்படி இந்த தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என்றால், மணி ஆர்டர் மூலம் வீடு தேடி சென்று விடுகிறது. இந்த மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த நிபதனைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஒரே நாடு .... ஒரே தேர்தல் வேடிக்கை - சரத்குமார் விமர்சனம்
எதிர்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!
அரசு அறிவித்திருக்கும் இந்த திட்டத்திற்கு பலர் வரவேற்பு அளித்திருந்தாலும், சில அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தகுதி அடிப்படையில் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் பணம், அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன குரல்களை எழுப்பி வந்தனர்.
பாஜக ஆர்பாட்டம்..
அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் வரும் 18ஆம் தேதியன்று இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
குடும்ப ஆட்சி குறித்து பேசிய அண்ணாமலை:
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், திமுக உள்ளிட்ட கட்சிகள் குடும்ப ஆட்சி செய்வதாக கூறி விமர்சித்தார். இவருடன் இந்த விவாத நிகழ்ச்சியில் சந்திர சேகர ராவ் மகள், கவிதாவும் கலந்து கொண்டார். குடும்ப ஆட்சி குறித்து அண்ணாமலை பேசியதற்கு இவர் கொடுத்த ரிப்ளை வைரலானது. அவர், “உங்கள் கட்சியில் ஜோதிராவ் சிந்தியா குடும்ப ஆட்சி செய்யவ்ல்லையா? திமுகவை குடும்ப ஆட்சி என்று கூறும் உங்களுக்கு அவர்களுடன் கூட்டணி வைத்திருந்த போது அது குடும்ப ஆட்சி என்று தெரியவில்லையா?” என்று கேள்விகளால் கடுமையாக விளாசினார். இவர் இவ்வாறு கேள்வியெழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | லாட்டரி மாட்டின்க்கு சொந்தமான ரூ.451 கோடி சொத்துக்கள் முடக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ