தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக முக்கிய நிர்வாகிகள் சொத்துப் பட்டியலை சென்னை தியாகராயநகரில் இருக்கும் கமலாலயத்தில் வெளியிட்டார். தான் அணிந்திருக்கும் ரஃபேல் வாட்ச் பில்லை முதலில் வெளியிட்ட அவர், அந்த வாட்சை கோவையில் இருக்கும் தொழிலதிபர் சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் இருந்து வாங்கியதாக விளக்கம் அளித்தார். அதற்கான பில்லையும் ஆதாரமாக வெளியிட்டார். அதனை தொடர்ந்து திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலும், அவர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த சொத்து பிரமாண பத்திரத்தில் இருக்கும் சொத்துக்கள் குறித்த தகவலையும் வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக சொத்து மதிப்பு


முதலில் ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பை வெளியிட்ட அண்ணாமலை, வரிசையாக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார். அவர் வெளியிட்ட இந்த பட்டியலில் இடம்பெற்றவர்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 1.34 லட்சம் கோடியை தாண்டியது. 


மேலும் படிக்க | அண்ணாமலை வெளியிடப்போவது திமுக முக்கிய புள்ளிகளின் ஊழல் பட்டியலா? சொத்து பட்டியலா?


அடுத்த சீரிஸ் எப்போது?


இதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, இது முதல் பார்ட் மட்டுமே என தெரிவித்துள்ளார். இன்னும் அவர்கள் வைத்திருக்கும் கார் உள்ளிட்ட விவரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அடுத்ததாக பினாமி சொத்துகள், அவர்களின் நிறுவனங்கள் உள்ளிட்ட விவரங்களை அடங்கிய அடுத்தடுத்த சீரிஸ் வர இருப்பதாக தெரிவித்துள்ளார். பார்ட் 2, பார்ட் 3, பார்ட் 4 என அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைத்தும் வெளியிடப்பட இருப்பதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். இதில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சொத்து மதிப்பும் இருக்கும் என அண்ணாமலை தெரிவித்திருப்பது ஹலைட்டாக பார்க்கப்படுகிறது.  


மேலும் படிக்க | அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் வாட்சு பில் - யார் இந்த கோவை சேரலாதன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ