அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் வாட்சு பில் - யார் இந்த கோவை சேரலாதன்?

தான் கட்டியிருக்கும் கை கடிகாரமான ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை நண்பர் சேரலாதனிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2023, 12:27 PM IST
  • அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்
  • பில்லை வெளியிட்டார் அண்ணாமலை
  • திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியல் வெளியீடு
அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் வாட்சு பில் - யார் இந்த கோவை சேரலாதன்? title=

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ, எம்பிகளின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார். தமிழக அரசியலில் ஊழல் கறைபடிந்திருப்பதாகவும், தான் அதனை தூய்மைப்படுத்த வந்திருப்பதாகவும் பேட்டிகளில் தெரிவித்து வந்தார். மேலும், ஆடு மாடுகளை வளர்க்கும் தான் ஒரு ஏழை விவசாயி என்றும் கூறினார். அவரின் இந்த பேட்டிகளுக்கு பதிலடி கொடுத்த திமுக, அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் மதிப்பு குறித்து கொளுத்தி போட்டது. ஏழை விவசாயி எப்படி லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்சை கையில் கட்டியிருக்க முடியும் என்றெல்லாம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை தான் கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் விலை உயர்வானது என்றாலும், அதனை நேர்மையாக வாங்கியதாகவும் அதற்கான பில் உள்ளிட்ட விவரங்களை ஆதாரங்களுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க | அண்ணாமலை வெளியிடப்போவது திமுக முக்கிய புள்ளிகளின் ஊழல் பட்டியலா? சொத்து பட்டியலா?

அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் முன்னிலையில் திமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரின் சொத்து விவரங்கள் பட்டியலையும், அவர்கள் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் கொடுத்திருக்கும் சொத்துப் விவரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு குறித்தும் வெளியிட்டார். இதற்கு முன்பாக தன்னுடைய ரஃபேல் வாட்ச் குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, இந்தியாவில் 2 பேரிடம் மட்டுமே ரஃபேல் வாட்ச் இருப்பதாக கூறினார். மிகப்பெரிய எம்என்சி கம்பெனியில் பணியாற்றும் நிர்வாகி ஒருவரிடமும், கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் இருந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அதில் ரூ.3 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரஃபேல் வாட்சை கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் பெற்றுக் கொண்டதாக விளக்கம் அளித்துள்ளார். 2021 மே மாதம் 7 ஆம் தேதி முதல் இந்த ரஃபேல் வாட்ச் தன் கையில் இருப்பதாக அண்ணாமலை கூறியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், சிறிய வீட்டில் வாடகைக்கு இருந்ததாகவும், இப்போது மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய வீடு ஒன்றுக்கு வாடகைக்கு சென்றிருப்பதாக கூறியிருக்கிறார். அந்த வீட்டு வாடகை, காருக்கு டீசல், ஊழியர்களுக்கான சம்பளத்தை நண்பர்கள் தான் கொடுத்து வருவதாக தெரிவித்திருக்கும் அண்ணாமலை, நல்ல மனிதர்கள் உடனிருப்பதால் தனக்கு எந்தவித பொருளாதார நெருக்கடியும் இல்லை என கூறியுள்ளார். ரஃபேல் வாட்ச் பில்லைத் தொடர்ந்து திமுக முக்கிய நிர்வாகிகளான ஜெகதரட்சகன், கனிமொழி, டிஆர் பாலு, கே.என் நேரு, உதயநிதி ஸ்டாலின், கலாநிதி வீராச்சாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரின் சொத்துவிவரங்களையும் வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | ராகவா லாரன்ஸின் ருத்ரன் நாளை ரிலீஸ்... தடை நீங்கியது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News