#SterliteProtest உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வட்டாட்சியர்கள் நியமனம் -தூத்துக்குடி ஆட்சியர்!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வட்டாட்சியர்கள் நியமனம் -தூத்துக்குடி ஆட்சியர்!!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க ஒரு வலைத்தளம் தொடங்கப்படும். அந்த வலைதளத்தில் தொழிலாளர்கள் தங்கள் விபரங்களை கொடுக்க வேண்டும். அதன்படி, அவர்களுக்கு வேறு தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இதற்காக தனித்தனியாக துணை வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.