தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு சீரழியும் தலைமுறை. ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
திருப்பத்தூர்: ரம்மி விளையாடுவதை கண்டித்ததால் IT ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வழியாக நடைபெறும் சூதாட்டம் மக்களை அதுவும் குறிப்பாக தமிழக மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அதிலும் முக்கியமாக ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. யாரிடம் எது இருக்கிறதோ இல்லையோ,ஸ்மார்ட்போன் மட்டும் இல்லாமல் இருப்பதில்லை.ஸ்மார்ட்போன் பலரது வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது என்பது தான் நிதர்சனம்.சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
பலரும் தங்களின் ஸ்மார்ட்போன் வழியாக யாருக்கும் தெரியாமல் விளையாடி வந்த இந்த ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தற்போது பலரின் உயிரை எடுக்கும் ஒன்றாக மாறிவிட்டது. இதனை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சென்னையில் உள்ள தனியார் IT நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது நடைபெற்ற 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செலுத்த தன் ஊருக்கு வந்தார்.
இந்நிலையில்,ஊருக்கு வந்த அவர் தனது வீட்டில் தொடர்ந்து செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இந்த கேம் மூலம் ஆரம்பத்தில் சிறிதளவு பணத்தைப் பெற்ற உற்சாகத்தில் மேலும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்துள்ளார். அதுமட்டுமல்லாது மேலும் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார்.இந்த விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.அதனால் அவர்கள் ஆத்திரத்தில் மகனை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால்,ஆனந்தன் மனமுடைந்தார்.
மேலும்,ஆத்திரமடைந்த ஆனந்தன் கோபத்தில் தனது ஸ்மார்ட்போனை உடைத்துவிட்டு, வீட்டில் உள்ள தனது அறைக்குள் வேகமாக சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.இவரின் இந்த செய்கையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காப்பாற்ற முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து,உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞரின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுபோல் பலரும் இத்தகைய ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு சீரழிகின்றனர்.இந்த துக்க சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR