ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 10, 2021, 12:58 PM IST
  • தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் நாள் முந்தைய அரசான அதிமுக அவசர சட்டத்தை பிறப்பித்தது.
  • 'ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது;
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் - அன்புமணி இராமதாஸ்! title=

தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெறுவதை தடுக்க தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் நாள் முந்தைய அரசான அதிமுக அவசர சட்டத்தை பிறப்பித்தது.  பின்பு, கடந்த பிப்ரவரில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதே மாதம் 25-ம் நாள் GO வெளியிடப்பட்டது.   இந்த சட்டம்  செல்லாது எனத் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது .

ஆன்லைன் விளையாட்டு அவரவர் திறமை சார்ந்த விளையாட்டு எனவும், அது சூதாட்டம் இல்லை  எனவும் நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்து உள்ளது; அந்த அடிப்படையில்தான் 'ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்' என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.  இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

anbuami

தற்போது ஆனந்தன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற மென்பொருள் பொறியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்கள்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அப்பாவி இளைஞர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு குறைகள் இல்லாத புதிய சட்டத்தை இயற்றுவது தான் ஒரே  தீர்வு. அதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் பயனில்லை. தமிழ்நாட்டு இளைஞர்களை காக்க உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

 

ALSO READ விரைவில் வருகிறேன் எல்லோரையும் சந்திக்கிறேன்! - சசிகலா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News