சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கில் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களின் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதியை முடக்கி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவை ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது. அதைத் தொடர்ந்து கவர்னரிடம் அவர் மீது பல்வேறு விதமான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அதற்கான அறிக்கையை வழங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களை வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 


திமுக ஆட்சி வந்தவுடன் அவருக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள 47-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆவணங்கள் பொருட்கள் கைப்பற்றப் பட்டு விசாரணை வளையத்துக்குள் எஸ்.பி வேலுமணி சிக்கினார். எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. 


அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க: எஸ்.பி. வேலுமணி மீது பதிவான வழக்குகளின் முழு விவரம்!


இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட வைப்பு நிதி ஆவணங்கள்  மற்றும் கணக்குகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், 2017ஆம் ஆண்டிற்கு பிறகு கே.சி.பி. இன்ப்ரா நிறுவனத்தின் 109 கோடி ரூபாய் மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனத்தின் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் என 110 கோடியே 80 லட்ச ரூபாய்க்கான நிரந்தர வைப்பு நிதி செலுத்தி இருப்பதாக, தெரிவந்திருப்பதால் அவற்றை முடக்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மனுத்தாக்கல் செய்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், கே.சி.பி. இன்ப்ரா மற்றும் ஆலம் கோல் அண்ட் டைமண்ட் நிறுவனங்கள் வங்கிகளில் செலுத்தியுள்ள 110 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதிகளை முடக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மேலும் படிக்க: வேலுமணியை vs கே.என்.நேரு: வீராப்புப் பேசுவது வீண் வம்பை விலைக்கு வாங்குவதற்குச் சமம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR