அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது உறவினர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நேற்று நடைபெற்றது. கோவை குனியமுத்தூரில் உள்ள வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வந்தனர்.
எஸ்.பி வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நேற்று முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்தனர். மேலும் அவரிடமிருந்து பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் நேற்று நடந்த வருமான வரி சோதனை பற்றி ட்விட்டரில் வேலுமணி (SP Velumani), “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற (1/3) pic.twitter.com/9l4PZ2LL5S
— SP Velumani (@SPVelumanicbe) August 11, 2021
ALSO READ: எஸ்.பி.வேலுமணியின் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை!!
கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அண்ணன் @OfficeOfOPS அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கும், (2/3)
— SP Velumani (@SPVelumanicbe) August 11, 2021
மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். (3/3)
— SP Velumani (@SPVelumanicbe) August 11, 2021
நேற்று வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது அவருக்கு ஆதரவாக சில எம்எல்ஏ-க்களும் அவரது தொண்டர்கள் கூடினர். கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதால் அனைவரது மீதும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | Tamil Nadu: பாஜக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR