மன்னார்குடி தனி துணை ஆட்சியரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
மன்னார்குடி தனி துணை ஆட்சியரின் வீடு, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடியில் தனி துணை ஆட்சியராக பணிபுரிந்து வருபவர் பவானி. இவர் ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சிங்கப் பெருமாள் கோயில் அருகே சாரதி நகர் 2வது தெருவில் அவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஸ்ரீரங்கம் தாசில்தாராக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருக்குச் சொந்தமாக திருச்சி வாளாடியில் உள்ள அவரது பெட்ரோல் பங்க் மற்றும் மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்விஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி, டால்மியாபுரத்தில் உள்ள இவரது அலுமினியம் தொழிற்சாலைகளிலும் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | விசாரணை அறிக்கை தர 25 ஆயிரம் லஞ்சம் - பெண் இளநிலை உதவியாளர் கைது.
பவானி பல நபர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. லஞ்ச பணத்தின் மூலம் முறைகேடாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும் புகார்கள் வந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக முதல் கட்ட தகவலில் தெரிகிறது.சோதனை முடிவில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ALSO READ | திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு
ALSO READ | விசாரணை அறிக்கை தர 25 ஆயிரம் லஞ்சம் - பெண் இளநிலை உதவியாளர் கைது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR