விசாரணை அறிக்கை தர 25 ஆயிரம் லஞ்சம் - பெண் இளநிலை உதவியாளர் கைது.

காஞ்சிபுரம் சமூக நலத்துறை அலுவலகத்தில் விசாரணை அறிக்கை தர 25 ஆயிரம் லஞ்சம் பெண் இளநிலை உதவியாளர் கைது  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 29, 2021, 07:09 PM IST
விசாரணை அறிக்கை தர 25 ஆயிரம் லஞ்சம் - பெண் இளநிலை உதவியாளர் கைது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மாடியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள் கிருஷ்ண பிரசாத் - அர்ச்சனா தம்பதியினர் குடும்பத்தகராறு காரணமாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், புகார் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

aer

கடிதத்தின் அடிப்படையில் சமூகநலத்துறை அலுவலகத்தில் இருந்து கிருஷ்ண பிரசாத்திற்கு சாதகமாக விசாரணை அறிக்கை அளிக்க சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்சம் கேட்டு உள்ளனர். சமூகநலத்துறை அலுவலகத்தில் ஒரு லட்சம்  லஞ்சம் கேட்ட நிலையில், கிருஷ்ண பிரசாத் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக பேசி இன்று 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக சமூகநலத்துறை அலுவலகத்தில் தொகுப்பூதிய இளநிலை உதவியாளராக பணிபுரியும் பிரேமா என்பவரிடம் வழங்கியுள்ளார். முன்னதாக கிருஷ்ண பிரசாத் அளித்த புகாரின் பேரில் மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து கையும் களவுமாக பிரேமாவை பிடித்து கைது செய்தனர்.

are

மேலும் இது சம்பந்தமாக சமூகநலத்துறை அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு லஞ்ச பணத்தை பெறுவதில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ மகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயற்சி -கோவையில் பரபரப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News