மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இருதய  துறையில் பணிபுரியும் டாக்டர் எஸ்.கே.பி கருப்பையா அவர்களை 68 வயது மதிக்கத்தக்க ஒரு இதய நோயாளி சில தினங்களுக்கு முன் சந்தித்தார். தனக்கு ஏற்படும் பிரச்சனையை விலாவாரியாக மருத்துவரிடம் அந்த நோயாளி எடுத்துரைத்தார். அதாவது, இதய நோய்க்கான முறையான ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை ஏற்கனவே வேறு மருத்துவமனையில் அவர் செய்துள்ளார். 9 மாத காலம் ஆகிவிட்ட போதிலும், கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்துள்ளது. அத்துடன், மூச்சுத் திணறலும் இருந்துள்ளது. நாட்கள் செல்லச் செல்ல அவருக்கு வலி அதிகமாகியதால் வேறுவழியின்றி மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து, இருதய நிபுணர் டாக்டர்.எஸ்.கே.பி.கருப்பையாவிடம் எல்லாவற்றையும் சொல்லியுள்ளார்.  இதனையடுத்து, டாக்டர் எஸ்.கே.பி கருப்பையா அந்த நோயாளிக்கு மீண்டும் முதலில் இருந்து பல்வேறு பரிசோதனை செய்துப் பார்த்தார். மீண்டும் அவருக்கு ஆஞ்சியோகிராம் எடுத்து பார்த்தபோது இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த நாளத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த ஸ்டாண்டில் இருந்து இரத்த கசிவும், வீக்கமும் ஏற்பட்டு இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘எனக்கு எதுவுமே தெரியாது’ - பார்ட் 2 ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ் சொல்லும் பதில்.!


நாட்கள் அதிகமாகிவிட்டதால் அந்த வீக்கம் மிகவும் பெரிதாகி பலூன் போன்று வீங்கி இருப்பதை  டாக்டர் எஸ்.கே.பி கருப்பையா கண்டுபிடித்தார். அந்த பலூன் போன்ற வீக்கம் உடைந்தால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் உடனடியாக அடுத்தக்கட்ட சிகிச்சையை ஆரம்பித்தார் டாக்டர் கருப்பையா. ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த ஸ்டென்ட்டின் மேல்  புதிதாக ஒரு கவர் ஸ்டென்டினை பொருத்தி அந்த ரத்தக் கசிவையும் வீக்கத்தையும் உடனடியாக சரி செய்வது என மருத்துவர்கள் முடிவுசெய்தனர். அதன்படி, ஆபத்தான இந்த சிகிச்சை முறையை வெற்றிகரமாக செய்துமுடித்து அப்போலோ மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். 


இந்த நவீன முன்னோடியான ஆஞ்சியோபிளாஸ்டி வெற்றிகரமாக செய்து கொண்டவர் சிகிச்சைக்குப்பின் இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவர்களின் இந்த சாதனையை அப்போலோ மருத்துவமனை பத்திரிக்கையாளர் சந்திப்பில்வாயிலாக தெரிவித்தது. அதில், இருதய நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி கருப்பையா, மருத்துவர் நிர்வாகி டாக்டர் பிரவின் ராஜன் மற்றும் மார்க்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR