அரக்கோணம் அடுத்த தோல் ஷாப் பகுதியில் வசிப்பவர் 22 வயதான மனோ. இவர் திருநின்றவூரில் பூக்கடையில் பூமாலை கட்டும் வேலை செய்து வருகிறார். இவர் தேவதானபட்டினத்தை சேர்ந்த 19 வயதான அம்சா நந்தினி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதற்கிடையே, கடந்த 5 ம் தேதி நள்ளிரவு வீட்டிலிருந்த அனைவரும் உறங்கியுள்ளனர். தாய் அம்சா நந்தினி அருகில் குழந்தையும் படுத்துறங்கியது. அப்போது நள்ளிரவு ஒரு மணியளவில் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு மீண்டும் உறங்கிய நேரத்தில் குழந்தையை திடீரென்று காணாமல் போனது.  2 மணிக்கு எழுந்து பார்த்த போது குழந்தை இல்லாததைக் கண்ட அம்சா நந்தினி அதிர்ச்சியடைந்து கணவர், மாமியாரை எழுப்பி விசாரித்துள்ளார்.


பல இடங்களில் தேடிய நிலையில் வீட்டின் வெளியே உள்ள கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் பக்கெட் நீரில்  முழு கடித்து தலைகுப்புற இறந்த நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தந்தை மனோ அளித்த புகாரின் பேரில் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 



குழந்தையின் தந்தை மனோவின் சகோதரி தேன்மொழி(52), மற்றும் அவரது மகள் பாரதி(30) ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மனோவின் தந்தை இறந்த பின் அவருடைய வீட்டுமனை தேன்மொழிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது கிடைக்கவில்லை.ஆனால் அந்த நிலத்தில் மனோவின் தாய் கீதா சிறிய வீடுகட்டி மகனுடன் வசித்து வந்திருக்கிறார்.


இதற்கிடையே, தனது மகளை தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்து சொத்த வளைத்து போட நினைத்திருக்கிறார். ஆனால், தனது இளைய மகளை மனோ திருமணம் செய்யாமல் வேறு இனத்து பெண்ணை திருமணம் செய்து ஆண் வாரிசும் பிறந்ததால் மேலும் ஆத்திரமடைந்த தேன்மொழி குழந்தையை கொலை செய்ய மகளுடன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவே அம்சா நந்தினியை தீய சக்தி பிடித்துள்ளதாக கூறி அடிக்கடி வீட்டில் அடைத்து மந்தீரிகம் செய்வதாக கூறி வேப்பிலையால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.



குழந்தையின் தந்தை மனோ தனது பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை மணந்தது, சொத்து கிடைக்காத விரக்தியால் திட்டமிட்டு சம்பவத்தன்று இரவு வீட்டின் வெளியே படுத்திருந்த தேன்மொழி பலமுறை உள்ளே சென்று முயற்சித்து இறுதியாக அனைவரும் உறங்கிய பின் குழந்தையை தூக்கியிருக்கிறார். பின்னர், வெளியே உள்ள பக்கெட் நீரில் தலைகீழாக போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று படுத்து உறங்கியதாகவும் பின்னர் அனைவரும் தேடும்போது தானும் தனது மகளும் சேர்ந்து குழந்தையை தேடியதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | ONE SIDE LOVE : லவ் சொல்ல மறுத்த இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற சைக்கோ!


இதனையடுத்து பச்சிளம் குழந்தையை கொன்றது, அதற்கு மகள் உடந்தையாக இருந்ததாக கூறி தேன்மொழி, பாரதியை அரக்கோணம் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனார் - போலீசில் சிக்கியவருக்கு என்ன கொடுத்தார்கள் ?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR