நாடும், ராணுவமும் அவர்கள் சொத்தா?... நாட்டுக்கு நல்லதில்லை - அமைச்சர் பிடிஆர்
ஒரு மதத்தை அவர்களது சொத்தென இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல், சுதந்திர தினத்தையொட்டிசென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை சுற்றியிருக்கின்ற பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றைப் பார்த்தால், அந்த நாடுகளைவிட இந்தியாவின் ஜனநாயகம் கடந்த 75 ஆண்டுகளாக சக்திவாய்ந்த ஜனநாயகமாக இருந்துள்ளது.
அதற்கு மூலக்காரணம், தேசப்பற்றையும் அரசியலையும் பிரித்து வைத்திருப்பது. ராணுவத்தையும், அரசியலையும் பிரித்து வைத்திருப்பது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் 75 ஆண்டுகால வரலாறு.நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது. ஏற்கெனவே ஒரு கட்சி, ஒரு மதத்தை அவர்களது சொத்து போல் இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை” என்றார்.
முன்னதாக, காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் சில நாள்களுக்கு நடந்த மோதலில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். மதுரைக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது பாஜகவினர் செருப்பை வீசி பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டனர். இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவினர் கைது செய்யப்பட்டதும், பாஜகவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விடுதலை போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்றுகிறார் பிரதமர் - அமித் ஷா புகழாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ