Armstrong Case Murder Goondas Latest News Updates: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை 5ஆம் தேதி ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தன. தேசிய அளவில் இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியதால் இந்த வழக்கின் விசாரணையும் பரபரப்படைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொலை நடந்த மறுநாளே இதுதொடர்பான 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது இவர்கள்தான் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு ரோந்தின்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பிருப்பதாகவும், அந்த கொலைக்கு பழிக்குப் பழி வாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 


ஸ்கெட்ச் போட்ட அருள்


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். பொன்னை பாலு உள்பட திருவேங்கடம், அருள், சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், ராம், செல்வராஜ், சதீஷ், நரேஷ், சீனிவாசன் என மொத்தம் 11 பேர் கைதானார்கள். இவர்களை 15 நாள்களுக்கு போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 


தொடர்ந்து, போலீசார் இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு விவரங்கள் தெரியவந்திருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான வழக்கறிஞர் அருள் என்பவரே இந்த கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார் எனவும், அனைவருக்கும் ஆயுதங்களை வழங்கியது மட்டுமின்றி கொலைக்கு பிறகு அனைவரிடத்திலும் இருந்து வாங்கி அவற்றை மறைத்தும் வைத்துள்ளார் எனவும் தெரியவந்தது. இதனை அறிந்த காவலர்கள் அருளை அழைத்துச் சென்று அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | என்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலு


என்கவுன்டரில் இறந்த திருவேங்கடம்


அதேபோல், கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றொரு நபரான திருவேங்கடமும் தனக்கு சொந்தமான இடங்களில் சில ஆயுதங்களை பதுக்கிவைத்திருப்பதாக தெரியவந்துள்ளனது. எனவே, திருவேங்கடத்தை காவல்துறையினர் நேற்று (ஜூலை 14) காலை மாதவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பியோடி மாதாவரம் பகுதியில் வெஜிடேரியில் வில்லேஜ் என்ற பகுதியில் தனியாக ஒரு தகர கொட்டகை அருகே பதுங்கி உள்ளார். அவரை சரணடையுமாறு போலீசார் கூறியுள்ளார். 


திடீரென மறைந்திருந்த திருவேங்கடம் கள்ளத் துப்பாக்கியை கொண்டு காவல் ஆய்வாளர் முகமது புகாரியை சுட முயன்றதாகவும், இதனால் அதிர்ச்சடைந்த காவல் ஆய்வாளர்களான முகமது புகாரி மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தற்காப்புக்காக ஒரே நேரத்தில் துப்பாக்கியில் சுட்டதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது. இந்த என்கவுன்டர் சம்பவமும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


10 பேர் மீது குண்டாஸ்


போலீஸார் என்கவுண்டர் செய்யப்பட்டு உயிரிழந்த திருவேங்கடத்தின் உடல் உடற்கூறு ஆய்வு மாதாவரம் மேஜிஸ்டரேட் தீபா முன்னிலையில் நேற்று இரவு நடைபெற்றது. உடற்கூராய்வு முடிந்த பின்பு அவரின் உடல் உறவினரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது  திருவேங்கடத்தின் தந்தை மற்றும் உறவினர்கள் உடலைப் பெற்றுக் கொண்டனர். சென்னை மூலகொத்தளத்தில் உள்ள சுடுகாட்டில் இறுதி சடங்கை மேற்கொண்டனர். 


இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தற்போது கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கும் பொன்னை பாலு, அருள், சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், ராம், செல்வராஜ், சதீஷ், நரேஷ், சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் மீதும் குண்டாஸ் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ