Armstrong Murder Case Latest Update News : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய ரவுடிகளுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்திருக்கும் காவல்துறை, திரைமறைவில் இருந்து ஸ்கெட்ச்போட்டுக் கொடுத்த ரவுடி சம்போ செந்தில் மீதான விசாரணையை தொடங்கியிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5 ஆம் தேதி பெரம்பூரில் அவரது வீட்டின் அருகிலேயே ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையில் ஈடுபட்ட 11 பேரை சில மணி நேரங்களிலேயே காவல்துறை கைது செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக அவரது தம்பி புன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கைதானபிறகு காவல்துறையிடம் தெரிவித்தனர். அதில் ஆம்ஸ்ட்ராங்கை முதன்முதலாக வெட்டிய திருவேங்கடம் அண்மையில் தப்பிச் செல்ல முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டார். எஞ்சியிருப்பவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், புன்னை பாலு உயிருக்கு பாதுகாப்புகோரி அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு ஆபத்து - எச்.ராஜா!


வீடியோ கான்பரன் சிங் மூலம் விசாரணை


இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் இந்த வழக்கில் விசாரணைக்காக மேலும் மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் மூன்று பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்திருக்கிறது. கொலையாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவில்லை. வீடியோ கான்பரன்சிங் வழியாகவே ரவுடிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலையான 16வது நாளில் அவரது கொலைக்கு காரணமானவர்களை பழிக்குபழி வாங்க சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து, முன்னெச்சரிக்கையாக ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவில்லை. 


பாம் சரவணன் மூலம் அச்சுறுத்தல்


இப்போதைக்கு கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் நண்பரும், தீவிர ஆதரவாளருமான பாம் சரவணன் மூலம் இவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாம் சரவணன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நீதிமன்றத்திலும், காவல்நிலையத்திலும் நிலுவையில் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், ஆம்ஸ்ட்ராங்கின் மற்ற ஆதரவு நபர்களும் அவரது கொலைக்கு பழிக்கு பழிவாங்க ஆக்ரோஷத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த விஷயத்தில் காவல்துறை முன்னெச்சரிக்கையாவும், அதேநேரத்தில் மிக கவனமாகவும் செயல்பட்டு வருகிறது. பழிக்குப் பழி கொலை நடந்தால் அது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கும் என்பதால், உன்னிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை முன்னெடுத்து வருகிறது தமிழ்நாடு காவல்துறை.


யாருக்கு எல்லாம் தொடர்பு?


இதுவரை நடத்தப்பட்ட காவல்துறை விசாரணையில் பல்வேறு ரவுடி கும்பலுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதை காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. குறிப்பாக, ஆற்காடு சுரேஷ், கல்வெட்டு வி உள்ளிட்ட பல ரவுடிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து திரைமறைவில் இருந்து செயல்படும் சம்போ செந்திலுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. ஸ்கிராப் பிஸ்னஸ் மற்றும் நிலத்தகராறு ஆகியவற்றில் சம்போ செந்தில் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் மீது கோபத்தில் இருந்ததாகவும், அதற்காக அவரை பழிவாங்க நினைத்துக் கொண்டிருந்த ஆற்காடு சுரேஷ் கும்பலுடன் இணைந்து இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாம் என்ற கோணத்திலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


மேலும் படிக்க | வருமான வரியை குறைக்க வேண்டும் என தமிழநாடு முதலமைச்சர் வலியுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ