ஆருத்ரா தரிசனம்: நடராஜராய் சிவபெருமான் ஆடும் நடனத்தின் தாத்பர்யம் என்ன?
பக்தர்களை ஒரு ஆனந்தமான மனநிலைக்கு கொண்டு செல்லும் சிவபெருமானும் அவரது நடனமும், நிலையற்ற நிலையில் இருந்து நித்தியமான நிலைக்கு நாம் உயர வேண்டும் என்ற வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
ஆருத்ரா தரிசனம்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நடராஜராய் ஆடல் மன்னன் சிவபெருமான் ஆடும் ஆனந்த நடனத்தைக் காண கண்கோடி வேண்டும். ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானின் அந்த ஆனந்த நடன தரிசனத்தைக் காண்பவர்கள் அனைத்து புண்ணியங்களையும் பெறுவர் என்பது ஐதீகம்.
தமிழ் மாதமான மார்கழியில் (Margazhi), டிசம்பர் - ஜனவரி மாதங்களில் ஆருத்ரா தரிசனம் விழா கொண்டாடப்ப்படுகின்றது. திருவதிரை (ஆருத்ரா) நட்சத்திரம் ஆட்சி செய்யும் இந்த மாதத்தின் பௌர்ணமி இரவில் இந்த நாள் வருகிறது. ஆருத்ரா என்பது தங்க சிவப்பு சுடரைக் குறிக்கும் நட்சத்திரமாகும். ஆனந்த நடனமாடும் சிவபெருமானே இந்த சுடராவார். சிவபெருமானை அண்டமெலாம் ஆனந்த நடனமாடும் நடராஜப் பெருமானாக தரிசனம் செய்வதுதான் இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாகும்.
ஆருத்ர தரிசனத்தின் போது என்ன நடக்கும்?
ஆருத்ர தரிசனம் (Arudra Darisanam) என்பது சிவன் கோயில்களில் குறிப்பாக, நடராஜர் சிலை உள்ள சிவன் கோயில்களில் மிகவு சிறப்பாக கொண்டாடப்படும் ஆன்மீக நிகழ்வாகும். தமிழ்நாட்டில் (Tamil Nadu) நடராஜருக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட கோயிலான சிதம்பரத்தில் (Chidambaram) இது மிகுந்த சிரத்தையுடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
இந்த நாளில் நடராஜரை தரிசனம் செய்வது மிகவும் புனிதமானதாகவும் நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது. நாள் முழுவதும், கோயில்களில் புனித அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. நாள் முடிவில், களி எனப்படும் ஒரு சிறப்பு வகை உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.
நடராஜர் ஏன் நடனமாடுகிறார்?
நடராஜர் (Natarajar) அண்டத்தின் நலனுக்காக நடனமாடுகிறார். இயக்கத்தின் மூலம் பிரபஞ்சம் உருவாகிறது. துகள்களின் ஊசலாட்டத்துடன் வாழ்க்கை செல்கிறது. அதிர்வு இருக்கும் வரை, வாழ்க்கை இருக்கும், வளர்ச்சி இருக்கும், செயல்பாடு இருக்கும். நிர்மூலமாக்குதல் என்பது இயக்கத்தை நிறுத்துவதாகும். ஆகையால், சிவனின் அண்ட நடனத்துடன், அதன் இயக்கத்துடன் பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சி ஒத்துள்ளது. அவரது நடனம் ஒவ்வொரு கலத்திலும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிகழ்கிறது.
ALSO READ: இன்று திருவாதிரை: நடராஜரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள்
சிவனின் நடனத்தைப் பார்ப்பதன் முக்கியத்துவம்
சிவன் இந்து மதத்தின் மிக உயர்ந்த கடவுளாவார். அவர் பிரபஞ்சத்தை உருவாக்கியவர், பாதுகாப்பவர், அழிப்பவர். சிவன் படைப்பு, வாழ்க்கை, அழிவு, உருவகப்படுத்துதல் மற்றும் விடுவித்தல் ஆகிய ஐந்து செயல்களின் பரவசத்தில் நடனமாடுகிறார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காலப்போக்கில் மாற்றத்திற்கும் அழிவுக்கும் கட்டுப்படுவதைக் குறிக்கும் வகையில் அவர் தனது உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொள்கிறார்.
பக்தர்களை ஒரு ஆனந்தமான மனநிலைக்கு கொண்டு செல்லும் சிவபெருமானும் அவரது நடனமும், நிலையற்ற நிலையில் இருந்து நித்தியமான நிலைக்கு நாம் உயர வேண்டும் என்ற வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
நடராஜர் நித்யமான ஆனந்தத்தின் சின்னமாக ஆடுகிறார்
நடராஜர் ஒரு கால் தூக்கி நடனமாடும் தோரணையில் நிற்கிறார். அவரது மற்றொரு கால் அறியாமையைக் குறிக்கும் அரக்கனின் மீது இருக்கிறது. இவ்வாறு அவர் அகம்பாவம், ஆசை மற்றும் தீமை ஆகியவற்றை அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறார். பஞ்ச பூதங்களையும் அவர் தாங்கி நிற்கிறார். உடுக்கை ஆகாயத்தையும், அலைபாயும் கூந்தல் காற்றையும், கையில் இருக்கும் சுடர் நெருப்பையும், கங்கை நீரையும் பாதம் பூமியையும் குறிப்பிடுகின்றன.
இறைவன் உலகளாவிய சக்திகளின் தலைவராக இருக்கிறார். மேலும் படைப்பின் போது உலகங்களை உருவாக்க அவர் அவைகளை விடுவித்து பின்னர் அனைத்தையும் தனக்குள்ளே இழுத்துக்கொள்கிறார்.
ஆருத்ர தரிசனத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?
ஆருத்ரா தரிசனத்தன்று கோயிலுக்கு சென்று நடராஜரை தரிசனம் செய்வதும் உற்சவரின் வீதி உலாவைப் பார்ப்பதும் மிகவும் விசேஷமானது. இதனால் பக்தர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நாளில், மக்கள் களி என்ற ஒரு சிறப்பு வகை உணவை பிரசாதமாகப் பெறுகிறார்கள். இது ஆனந்தத்தைக் குறிக்கும் ஒரு இனிமையான உணவாகும். இதை சாப்பிடுவது மக்களின் எல்லா துன்பங்களையும் நீக்கி அவர்களை ஆனந்தமாக வாழ வைக்கும் என்று கூறப்படுகிறது.
ALSO READ: திருவாதிரைக்களி எப்படி செய்வது!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR